தேர்தலுக்கு முன்னே வெளியான கருத்துக்கணிப்பு ..! 

வரும் நாடாளுமன்றத் தேர்தல் தேர்தலில் மீண்டும் மோடி அலை வீசி மத்தியில் பாஜக இடம் பிடிக்குமா என்பது குறித்த ஆய்வு ஒன்றை சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த யூபிஎஸ் என்ற நிறுவனம் மேற்கொண்டது. 

அதன்படி சமீபத்தில் மத்திய அரசு சார்பாக அறிவிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூபாய் 6 ஆயிரம் அவரவர் வங்கிக் கணக்கில் அளிக்கப்படும் என்ற அற்புத திட்டத்திற்கு விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது என்றும் இதன்மூலம் மீண்டும் பாஜக மீது மக்கள் ஆர்வம் காட்டுவதாகவும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது

2014 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மோடி அலை மாபெரும் வெற்றியை கண்டது. அதன் பின்பு இரண்டாவது முறையாக மீண்டும் ஆட்சியை பிடிக்குமா..? என்ற கேள்விக்கு பெரும்பாலோர் கருத்து தெரிவித்து வந்தனர். அதன்பின் மேற்கொள்ளப்பட்ட ஒரு சில சர்வே கூட ஆரம்ப கட்டத்தில் பாஜக 200 இடங்களை பிடிக்கும் என்றும் தெரிவித்திருந்தது.

பின்னர் பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி உள்ளிட்ட ஒருசில காரணங்களால் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்த பாஜக 180 இடங்கள் வரை பெற வாய்ப்பு உள்ளது என ஆய்வில் தெரியவந்தது. இந்த நிலையில் விவசாயிகளுக்கு 6 ஆயிரம் வழங்கும் திட்டத்தை மோடி அறிவித்துள்ளதால் வரும் தேர்தலில் மோடிக்கு ஆதரவு  அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. 

ஆக மொத்தத்தில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் உடன் ஒப்பிட்டு பார்க்கும்போது, தற்போது ஆளும் கட்சியான பாஜக விற்கு சற்று கூடுதல் ஆதரவு மக்கள் மத்தியில் நிலவுகிறது என தெரிகிறது. மேலும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் தற்போது நிலவக்கூடிய வேலையில்லா திண்டாட்டம் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, கருப்பு பணம் பதுக்கல் உள்ளிட்டவற்றை மேற்கோளாகக்காட்டி பிரச்சாரம் செய்து வந்தால், அவர்களுக்கு உண்டான சாதகமான விஷயங்களும் உண்டு.

அதேவேளையில் மக்களுக்காக நலத்திட்ட திட்டங்களைக் கொண்டு வந்த பாஜகவிற்கும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆக மொத்தத்தில் மீண்டும் மோடி அலை வீசி பாஜக ஆட்சியை கைப்பற்றுமா அல்லது காங்கிரஸ் ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளதா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.