கருப்பர் கூட்டத்திற்கும் திருமாவளவன் அமைப்பிற்கும் இடையே உள்ள பின்புலம் உறவு குறித்து ஆழ்ந்து ஆராய்ச்சிகள் தேவை என பாஜக பிரமுகர் கல்யாண் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’கருப்பர் கூட்டத்தின் முழுமையான பின்னணி அதில் பங்கேற்றவர்களுக்கு மற்றும் அவரது மனைவி குடும்பத்தாருக்கு வெளியிலிருந்து வந்த பணவரவுகள் அவர்களது அலைபேசி உரையாடல்கள் ஆகியவை கவனிக்கப்பட வேண்டும் அவர்களது செயலை ஒரு வெளிநாட்டு சதியின் அங்கமாக நான் கருதுகிறேன்.

 

கருப்பர் கூட்டத்தின் செயல்களுக்கு முதன்முதலில் கேமரா உட்பட பல உபகரணங்களை வாங்கி தந்தவன் கார்த்திக் சிலகாலம் முன்னர் தனியார் தொலைக்காட்சியில் வேலை செய்தவன். பின்புலமாக இருந்து செயல்பட்ட இன்னொரு நபர் அசோக் நகர் ரமேஷ். இவர்கள் குறித்த தகவல்களை விசாரணை குழுவிடம் அளித்துள்ளேன்.

கறுப்பர் கூட்டத்தின் மூளையாக செயல்பட்ட முன்னாள் நக்சலைட்/ரவுடி சிற்பி ராஜன் தலைமறைவு. கறுப்பர் கூட்டத்தின் சுரேந்தர் ஆற்காடு முதலியார். அதாவது தமிழ்நாட்டு பட்டியலில் மேல்ஜாதி. இஸ்லாமிய பயங்கரவாத பணம் ஒரு மேல்ஜாதி பயலை தான் தாழ்த்தப்பட்டவன், பிற்படுத்தப்பட்டவன் என பொய்யாக கூற வைக்கிறது. அவரது மனைவியும் அதே சமூகத்தை சேர்ந்தவர். காதல் மணமாம். 

திக என்பது செத்து, அழுகிய பிணம். மீதம் உள்ளது எலும்புக்கூடு மட்டுமே, நாம் அதை கண்டுக்க கூடாது. தற்போதைய நவீன பகுத்தறிவு விசிலடிக்கும் சில்லறைபசங்க கட்சி(விசிக)நடத்துவது. அதன் பின்னணியில் இருப்பது முஸ்லீம் பயங்கரவாதஅமைப்புகள். வேலை செய்வது மதம் மாறிய கிறிஸ்தவர்கள்’’என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.