அரவக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளர் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலையை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அரவக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட வேலாயுதம்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். 

அரவக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளர் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலையை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அரவக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட வேலாயுதம்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். முன்னதாக, வேலாயுதம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் பேரணியாக சென்றும் அமித்ஷா வேலாயுதம்பாளையம் மலைக்கோயில் ரவுண்டானாவில் பாஜக வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதில், வேட்பாளர் அண்ணாமலை, கரூர் அதிமுக வேட்பாளர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அதிமுக எம்பி மு.தம்பிதுரை, பாஜக மாநில தேர்தல் பொறுப்பாளர் சி.டி. ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அண்ணாமலையை ஆதரித்து வேலாயுதம்பாளையம் ரவுண்டானாவில் தாமரை சின்னத்திற்கு வாக்கு கேட்டு அமித்ஷா பேசுகையில், உங்களை தரிசனம் செய்வதற்காகவும், அண்ணாமலையை வெற்றி பெற செய்ய வேண்டும் என ஆதரவு கேட்டு இங்கு வந்துள்ளேன்.ஒட்டுமொத்த காவல்துறையின் சிறந்த மனிதராக அண்ணாமலை இருந்து வருகிறார். அண்ணாமலையை பல்லாயிரக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். 

மோடிஜிக்கும், எடப்பாடிக்கும், ஓபிஎஸ்க்கும் தமிழ்நாட்டின் வளர்ச்சி தான் முக்கியமாக இருந்து வருகிறது. ஆனால், உதயநிதிக்கு, ஸ்டாலினை முதல்வராக்க வேண்டும் என்ற ஒரே எண்ணம்தான். திமுக, காங்கிரஸ் என இரண்டு கட்சியும் ஊழல் செய்த கட்சிகள்.வாக்கு இயந்திரத்தில் தாமரை சின்னத்தின் பட்டனை அழுத்துவீர்களா? என்ற கேள்வி எழுப்பிய அவர், தமிழகத்தில் ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆகியோரின் ஆன்மா நமது வெற்றிக்கு துணை நிற்கும் என்றார்.அண்ணாமலையை வெற்றி பெற செய்வீர்களா? என்று மக்களை பார்த்து கேட்ட அமித்ஷா, தமிழ் நாட்டின் முக்கிய வளர்ச்சிக்காக 1 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் பிரதமர் மோடி நிதி ஒதுக்கி உள்ளார் என்றார்.