தமிழக அரசியல் திரையுலகத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முட்டாள்கள் அதிகமாகி விட்டனர் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறியுள்ளார். 

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஹெச்.ராஜா;- குடியுரிமைத்திருத்த சட்டம் வந்தால் முஸ்லீம்களை பாகிஸ்தானுக்கு அனுப்புவார்கள் என்று கூறினர். குடியுரிமை சட்டம் கொண்டு வந்து 15 மாதங்கள் ஆகிறது, இதுவரையில் எந்த முஸ்லீமையாவது நாட்டை விட்டு அனுப்பி உள்ளதா மத்திய அரசு? குடியுரிமை சட்டம் பற்றி எதிர்க்கட்சிகள் பொய்ப்பிரச்சாரம் செய்தன. வேளாண் சட்டங்கள் தொடர்பாக பொய்ப்பிரச்சாரங்களில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டுள்ளன.

திராவிடக் கட்சிகளால் இளைஞர்களின் மூளையில் அழுக்கு படிந்துள்ளது. சினிமா, நாடகங்கள் மூலம் பாஜகவின் கொள்கைகள், சித்தாந்தங்களை மக்களிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும். இதற்கு பாஜகவில் உள்ள திரையுலக பிரபலங்கள் உதவ வேண்டும். தமிழக அரசியல் திரையுலகத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முட்டாள்கள் அதிகமாகி விட்டனர் என சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். 

திமுக என்றாலே பிரியாணி சாப்பிட்டு காசு கொடுக்காதது தான் மக்களுக்கு நினைவுக்கு வருகிறது என கடுமையாக விமர்சனம் செய்தார்.