Food Minister Kamaraj came to Apollo emergency with complaints of chest discomfort

தினகரன் - சசிகலா இடையேயான சந்திப்பு, அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி அவசர ஆலோசனை என தமிழக தவியாய் தவித்து வரும் நிலையில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

50 வயதைக் கடந்த காமராஜூக்கு இன்று மாலை 3 மணி அளவில் இருந்தே நெஞ்சு எரிச்சல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. சாதாரண புளி ஏப்பம் என நினைத்த அவர், எடப்பாடியின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக புறப்பட்டுச் சென்றுள்ளார். 

ஆனால் காரில் சிறிது தூரம் சென்ற உடனே அவருக்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டதாகத் தெரிகிறது.இதனைத் தொடர்ந்து சென்னை அப்போலோ மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். காமராஜின் உடல்நிலை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் அப்போலோ மருத்துவமனை இதுவரை வெளியிடவில்லை.