அரசு பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் லிலிருந்து சுமார் 92 ஆயிரம் ஊழியர்கள்  இன்று விருப்ப ஓய்வு பெறுகின்றனர் .  அரசு பொதுத்துறை நிறுவனத்தில் இருந்து இத்தனை ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் விருப்ப ஓய்வு பெறுவது இதுவே முதல் முறையாகும் .காங்கிரஸ் ஆட்சி களமாக இருந்தாலும் சரி பாஜகவாக இருந்தாலும் சரி முடிந்த அளவிற்கு தனியார்மய கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் அர்வம்காட்டி  வருகின்றனர்.

  

அதேபோன்று பொதுத்துறை நிறுவனங்கள் பெருமளவில் லாபம் ஈட்டுவதில்லை எனவே அது  நிதி நெருக்கடியில் சிக்கித்  தவித்து வருகிறது என பிஎஸ்எனஎல் மீது அதிருப்தி நிலவி வந்தது .  இதனால் கடந்த பிப்ரவரி மாதம் முதலே ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலையில் பிஎஸ்என்எல் தவித்து வருகிறது.  ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு இத்திட்டத்தை பிஎஸ்என்எல்  மற்றும் எம்டிஎன்எல் நிர்வாகம் அறிவித்தது . இந்நிலையில் ஆயிரக்கணக்கானோருக்கு விருப்ப ஓய்வுபெற விண்ணப்பித்தனர்.   அதேபோல் விருப்ப ஓய்வு பெறுபவர்கள் 50 வயதிற்கு மேல் உள்ளவர்களாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது  .  

விருப்ப ஓய்வு பெறுபவர்களுக்கு பணியிலிருந்த ஆண்டுகளைக் கணக்கிட்டு ஆண்டுக்கு 35 நாட்கள் ஊதியம்  வழங்கப்படும் என்றும் ஓய்வுபெறும் வயது வரை 25 நாட்களுக்கான ஊதியம் ஓய்வூதியமாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது இந்நிலையில் நாட்டிலேயே முதல்முறையாக ஒரே நாளில் சுமார் 92 ஆயிரம் ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெறுகின்றனர் .  பிஎஸ்என்எல் நிறுவனத்தில் மட்டும் 78 ஆயிரத்து 569 பேர் ஓய்வு பெறுகின்றனர் அதேபோல் என் டி என்  எல் ஈரோட்டில் இருந்து 14 ஆயிரத்து 378 பேர் இருப்பதாக கூறுகிறார்  அதாவது நாடு முழுவதிலுமுள்ள பிஎஸ்என்எல் ஊழியர்கள் சுமார் 51 பணியிலிருந்து  விலகுவது குறிப்பிடத்தக்கது .