Asianet News TamilAsianet News Tamil

அசாம், மேற்கு வங்கத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு.. காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

சிறு சிறு அசம்பாவிதங்களுடன் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. உள்ளூர் போலீசாருடன் இணைந்து துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா மற்றும் கோடை வெயில் தாக்கம் காரணமாக வாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் கூடுதலாக நீட்டிக்கப்பட்டுள்ளது 

First phase Election in Assam, West Bengal .. People have been voting enthusiastically since morning.
Author
Chennai, First Published Mar 27, 2021, 1:02 PM IST

5 மாநில தேர்தலில் துவக்கமாக, அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு  77 தொகுதிகளில் இன்று காலை முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கோடை வெயில் மற்றும் கொரோனா எதிரொலியாக இம்முறை தேர்தல் வாக்குப்பதிவு 1 மணி நேரம் கூடுதலாக அனுமதிக்கப்பட்டுள்ளது. தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம், அசாம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் பல கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் அட்டவணை வெளியிட்டுள்ளது. தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மூன்று மாதங்களில் ஏப்ரல் -6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

First phase Election in Assam, West Bengal .. People have been voting enthusiastically since morning.

மூன்று மாநிலங்களிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. மேற்கு வங்கம் பதற்றம் நிறைந்த  மாநிலம் என்பதால், மார்ச் 27 முதல் ஏப்ரல்29 ஆம் தேதி வரை என மொத்தம் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதேபோல அசாமில் மார்ச் 27ம் தேதி முதல் ஏப்ரல்-6 ஆம் தேதி வரை மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அந்தவகையில் அசாமின்  47 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகள் என ஒட்டுமொத்தமாக 77 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று முதல் கட்டமாக தொடங்கியுள்ளது. காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு ஆரம்பித்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய இரு மாநிலங்களும் பதற்றம்  நிறைந்த வாக்குச்சாவடிகள்நிறைந்த மாநிலங்கள் என்பதால், முன்கூட்டியே பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

First phase Election in Assam, West Bengal .. People have been voting enthusiastically since morning.

சிறு சிறு அசம்பாவிதங்களுடன் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. உள்ளூர் போலீசாருடன் இணைந்து துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா மற்றும் கோடை வெயில் தாக்கம் காரணமாக வாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் கூடுதலாக நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேற்கு வங்கத்தில் நடைபெற்றுவரும் 30 தொகுதிகளில் தலா 29 தொகுதிகளில் பாஜகவுக்கும் திரிணாமுல் காங்கிரசுக்கும் நேரடி போட்டி நிலவுகிறது. அசாம் மாநிலத்தில் மொத்தம் 126 சட்டசபை தொகுதிகளில் முதல்கட்டமாக 47 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios