Asianet News TamilAsianet News Tamil

முதலில் அண்ணாமலை.. அடுத்து முதல்வர் ஸ்டாலின்.. இன்று மத்தியமைச்சர் எல்.முருகன்.. ஆளுநர் சந்திப்பில் பரபர..!

ஏற்கனவே தமிழக பாஜக தலைவர்கள் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்திருந்த நிலையில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இன்று சந்தித்து பேசினார்.
 

First Annamalai .. Next Chief Minister Stalin .. Today Union Minister L. Murugan .. Governor's meeting excitement ..!
Author
Chennai, First Published Oct 15, 2021, 7:38 PM IST

தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி கடந்த செப்டம்பர் 18  அன்று பதவியேற்றார். ஆளுநர் பதவியேற்ற பிறகு தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து கூறினார்கள். ஆனால், கடந்த 12-ஆம் தேதி அன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டவர்கள் ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்தனர். அப்போது தமிழகத்தில் சட்டம் - கெழுங்கு கெட்டுவிட்டது என்றும் குற்ற செயல்களில் சிக்கிய திமுக எம்.பி.க்கள் மீதான வழக்குகளை சட்டப்படியும் நியாயப்படியும் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் ஆளுநரிடம் மனு அளித்தனர்.First Annamalai .. Next Chief Minister Stalin .. Today Union Minister L. Murugan .. Governor's meeting excitement ..!
இந்தச் சந்திப்பு நிகழ்ந்த அடுத்த நாளே முதல்வர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோர் ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்துப் பேசினார்கள். அப்போது நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்க வகை செய்யும் சட்ட மசோதா பற்றி விவாதித்தாகக் கூறப்பட்டது. மேலும் தமிழகத்தில் என்.ஐ.ஏ. மேற்கொண்ட கைது நடவடிக்கைகள் குறித்தும் இந்தச் சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாயின. இதற்கிடையே மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆளுநர் ஆர்.என்.ரவியை ஆளுநர் மாளிகையில் சந்தித்து பேசினார்.

First Annamalai .. Next Chief Minister Stalin .. Today Union Minister L. Murugan .. Governor's meeting excitement ..!
சுமார் அரை மணி நேரம் நீடித்த இந்தச் சந்திப்பு மரியாதை நிமித்தமானது என கூறப்படுகிறது. எனினும், ஏற்கனவே தமிழக பாஜக தலைவர்கள் சந்தித்து ஆளுநரை சந்தித்து வலியுறுத்திய கோரிக்கையின் தொடர்ச்சியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios