காவேரி மருத்துவ மணை முன் கூடிஇருக்கும் மீடியாவுக்கும் கழக உடன் பிறப்புகளுக்கு இன்று  இரவு பிரைடு ரைஸ்  வழங்க  உள்ளதாக சென்னை மேற்கு மாவட்ட கழக செயலாளர் ஜெ அன்பழகன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

அதில், கழகத் தோழர்கள் ஆயிரக்கணக்கானோருக்கு மதிய உணவு, 5000 குடிநீர் பாட்டில்கள் சற்று முன் வழங்கப்பட்டது. மேலும் இரவு “Fried Rice”வழங்க ஏற்பாடுகள் நடைபெறுகின்றன என  தெரிவித்து  உள்ளார்.திமுக தலைவர் கருணாநிதி, காவேரி மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அவரது உடல் நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டது என தகவல்  வெளியானதும் தொண்டர்கள் கோபாலபுரம் இல்லம் மற்றும் காவேரி மருத்துவமனை முன்பு குவிந்தனர்.

இந்நிலையில்  கடந்த இரண்டு நாட்களாக பசியும் பட்டிணியுமாக எதை பற்றியும்  கவலை கொள்ளாமல் கலைஞர்  வெளியில் வந்து கை அசைப்பாரா என்ற ஆவலுடனும், அவருடைய உடல் நலன் முன்னேற்றம் காண வேண்டும் என தொடர்ந்து  பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இவர்களுக்கு தேவையான உணவு மற்றும் குடீநீரை வழங்கி வருகிறார் சென்னை மேற்கு மாவட்ட கழக செயலாளர் ஜெ அன்பழகன்.