Asianet News TamilAsianet News Tamil

எவ்வளவு பெரிய ஆளாக இருந்தா என்ன..! பழசை மறக்க கூடாது..திராவிட உணவகமும் நானும் - பிடிஆர்

நான் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் பழசை எப்பொழுதும் மறக்க மாட்டேன் எனும் வகையில் நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் போட்ட டீவிட் நெட்டிசன்களால் வாழ்த்துக்களை பெற்றுள்ளது.
 

Finance Minister PTR palanivel thiagarajan
Author
Madurai, First Published Dec 10, 2021, 9:46 PM IST

தமிழகத்தின் தற்போதைய நிதி அமைச்சராக பணியாற்றி வருபவர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். குறுகிய காலத்திலே அதிரடி பேச்சுகளால்  சமூக வலைதளங்களில் வைரலாகி பிரபலமானவர். எதையும் வெளிப்படையாக பேசும் இவர், சில நேரங்களில் பதிவிடும் டீவிட் சர்ச்சைகளை கிளப்புவதும் உண்டு. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் இவர்தான் நிதி அமைச்சராக வருவார் என்று தேர்தலுக்கு முன்பே பேசப்பட்டது. பல உயர் படிப்புகளை படித்தவர் என்பதாலும் மிகப்பெரிய நிறுவனங்களில் பணியாற்றியவர் என்பதாலும் நிதித்துறை கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Finance Minister PTR palanivel thiagarajan

தற்போது நான் எவ்வளவும் பெரிய பதவில் இருந்தாலும் பழசை எப்போதும்  மறக்கமாட்டேன் எனும் வகையில் நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதிவிட்ட ஒரு டீவிட் நெட்டிசன்களால் வரவேற்கப்பட்டுள்ளது.  
மதுரை மாவட்டத்தை சேர்ந்த பிடிஆர். ஆரப்பாளையம் அடுத்த பொன்னகரத்தில் உள்ள பள்ளியில்தான் தனது பள்ளி படிப்பை முடித்துள்ளார். பள்ளிக்கூடம் செல்லும் காலங்களில் , இவர் படித்த பள்ளியின் நுழைவு வாயில் அருகில் பழமை வாய்ந்த 'திராவிட உணவகம்' என்னும் சாலையோர ஹோட்டல் உள்ளது. இந்த உணவகத்தில் பிடிஆர் மட்டுமின்றி சக மாணவர்களும் தனது நண்பர்களுடன் வந்து உணவு சாப்பிட்டுள்ளனர். பின்பு காலங்கள் கடந்தாலும், கட்சி பிரமுகர், எம்.எல்.ஏ, தற்போது அமைச்சர் என்று உயர் பதவிகள் வந்த போதிலும் பால்ய வயதில் சாப்பிட்ட அந்த திராவிட உணவகத்தை  எப்போதும் மறப்பதில்லை எனும் வகையில் நெகிழ்ச்சி சம்பவம் ஒன்றை அரங்கேற்றியுள்ளார்.

Finance Minister PTR palanivel thiagarajan

தனது  பள்ளிக்கூட நண்பரான அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வசித்து வரும் ஆனந்த் செல்வா என்பவருடன் திராவிட உணவகத்தில் அமர்ந்து சாப்பிடும் தற்போதைய புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டு அதில் உணவகத்தின் பழைய நினைவுகளையும் பள்ளி நாட்களையும் பகிர்ந்துள்ளார். அவர் அதில் குறிப்பிட்டுள்ளதாவது, 'நிலையானது, சில மாற்றம்... எங்கள் பள்ளியின் கேட் அருகே உள்ள திராவிட உணவகத்தில் Citi Global Consumer Bank சி.இ.ஓ ஆக இருக்கும் நண்பர் ஆனந்த் செல்வாவுடன்'' என்று  தொடங்கி, 1981-ம் ஆண்டு தான் படித்தபோது திராவிட உணவகத்தில் சாப்பிட்ட அப்போதைய பசுமையான நினைவுகளையும் குறிப்பிட்டுள்ளார். எவ்வளவு பெரிய வசதி படைத்த நண்பர்களாக இருந்தாலும் இந்த சாதாரணமான திராவிட உணவகத்தில் விருந்து கொடுப்பதை வாடிக்கையாக வைத்துள்ளதாக  தெரிவிக்கும் அவர் இந்த உணவகத்தில் சாப்பிடும்போது பள்ளியில் நிகழ்ந்த பசுமையான நினைவுகள் மனதில் நிழலாடும் என்று தனது மகிழ்ச்சியை வெளிபடுத்தியுள்ளார். உயர் பதவிக்கு சென்றாலும் பழசை மறக்கவில்லை எனும் வகையில் அவர் போட்ட பதிவு நெட்டிசன் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்

Follow Us:
Download App:
  • android
  • ios