தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் 20 தொகுதிகளை ஒதுக்கி அதிமுக 20 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. 

மக்களவை தேர்தலுக்காக அதிமுக தலைமையில் உருவாகியுள்ள கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகளும், பாஜகவுக்கு 5 தொகுதிகளும், தேமுதிக- 4  ஏ.சி.சண்முகம், என்.ஆர்.காங்கிரஸ், புதியதமிழகம் ஆகியோருக்கு தலா ஒரு தொகுதிகளும் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் தமாகாவுக்கு 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கூட்டணிக் கட்சிகளுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து 20 தொகுதிகளை ஒதுக்கியுள்ள அதிமுக மீதமுள்ள 20 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.

இன்னும் சில நாட்களில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் குறித்த அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் 21 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிட உள்ளனர். அவர்களுக்கு கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.