அமைச்சர் ஆதரவாளர்கள் அதிபயங்கர கோஷ்டி மோதல்… வேட்டியை உருவியதால் அலறியடித்து ஓடிய பொதுமக்கள்!

அமைச்சரின் ஆதரவாளர்களுக்குள் மோதல் ஏற்பட்டது, அப்போது அவர்களுக்குள் வேட்டியை உருவியதால் அங்கு பரபரப்பு நிலவியது.

Fight with Minister gangs

நேற்று திருச்சி விமான நிலையத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின்  வருகைக்காக,  காத்திருந்த அவரது ஆதரவாளர்களின் இரண்டு கோஷ்ட்டிகள் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த பயங்கர மோதலில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் பேரூராட்சி தலைவரை ஒரு தரப்பு உதைத்து வேஷ்டியை உருவியதால் ஏர்போர்ட்டில் இருந்த பொது மக்கள் அலறியடித்து ஓடினர்.   அப்போது அங்கு இந்தவர்கள் செல்போனில் படம்பிடித்தனர். மேலும், வேட்டி உருவப்பட்ட போட்டோக்களும், வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே பல சிக்கல்களில் இருக்கும் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மேலும் மனஉளைச்சலை கொடுக்கும் விதமாக ஏர்ப்போர்ட்டில் கோஷ்ட்டி மோதல்  அரங்கேறி இருப்பது அதிமுகவை வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios