Asianet News TamilAsianet News Tamil

8 வழிச்சாலை விவகாரத்தில் அன்புமணிக்கு சவால் விட்ட விவசாயி கைது! ஒரே நாளில் நடந்த அதிரடி...

8 வழிச்சாலை தீர்ப்பு தொடர்பாக, அன்புமணிக்கு சவால் விட்ட விவசாயியை அதிரடியாக கைது செய்திருப்பது, அந்த பகுதி விவசாயிகளையும், 8 வழிச்சாலை எதிர்ப்பு அமைப்பினரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
 

Farmer Arrest At Salem for challenges anbumani
Author
Chennai, First Published Apr 14, 2019, 7:22 PM IST

8 வழிச்சாலை தீர்ப்பு தொடர்பாக, அன்புமணிக்கு சவால் விட்ட விவசாயியை அதிரடியாக கைது செய்திருப்பது, அந்த பகுதி விவசாயிகளையும், 8 வழிச்சாலை எதிர்ப்பு அமைப்பினரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

8 வழிச்சாலைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இந்த திட்டத்தை கைவிட வேண்டுமென பலரும் வழக்கு தொடுத்திருந்தனர். அதில் முக்கியமானவர் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயி கிருஷ்ணமூர்த்தி. இவரது நிலம் 8 வழிச்சாலைக்காக எடுக்கப்படுவதால் அதனை எதிர்த்து வழக்கு தொடுத்திருந்தார். அவர் வழக்கு முக்கியமானதாக இருந்தது. 8 வழிச்சாலையால் பாதிக்கப்படும் தருமபுரி மாவட்ட விவசாயிகளை ஒருங்கிணைத்து எட்டுவழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தின் தருமபுரி மாவட்ட ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வந்தார். தீர்ப்பு வெளிவந்ததும், இந்த தீர்ப்பு எங்கள் வழக்கால் தான் வந்தது என அன்புமணியும், அவரது கட்சியினரும் பிரச்சாரம் செய்தனர்.

என் வழக்குதான் முக்கியமானது, தீர்ப்பின் நகலில் பாருங்கள், என் பெயர் தான் முதல் பக்கத்தில் இருக்கும். அந்த தீர்ப்பில் ஒரு இடத்தில் கூட அன்புமணி பெயரோ, அவரது வழக்கறிஞர் பெயரோ கிடையாது. யார் தொடுத்த வழக்கில் தீர்ப்பு வந்தது என்பதை அன்புமணி என்னுடன் விவாதிக்க தயாரா என சவால் விட்டிருந்தார்.

Farmer Arrest At Salem for challenges anbumani

அந்த விவசாயியின் சவாலை கேட்டு ஆத்திரமான பாமக நிர்வாகி  சத்தியமூா்த்தி, அந்த விவசாயில் கிருஷ்ணமூர்த்தியை போனிலும், நேரிலும் சென்று அசிங்க அசிங்கமாக திட்டி மிரட்டியுள்ளார். இது இஒருபுறமிருக்க அந்த வழக்கு தொடர்பாக 8 வழிச்சாலை எதிர்ப்பு இயக்க நிர்வாகியான பழனியப்பன் என்பவரின் மகனும் விவசாயியுமான சந்தோஷ், தொடர்ச்சியாக சமூக வளைத்தளங்களில் பதிவிட்டு வந்துள்ளார். இதில் அன்புமணியை தாறுமாறாக விமர்சனம் செய்து பதிவிட்டிருக்கிறார். மேலும் ஏமாற்றுகிறார் என்பதையும், அதிமுக – பாமக நடகத்தையும் அதில் பதிவு செய்திருக்கிறார்.

இதனால் கடுப்பான பாமக நிர்வாகிகள், சந்தோஷ் மீது பாப்பிரெட்டிப்பட்டி போலீசில் புகார் தர, அதிமுக - பாமக கூட்டணியில் உள்ளதால் அதிகாரத்தில் உள்ள அதிமுக தலைமையின் உத்தரவால் சந்தோஷ் கைது செய்யப்பட்டு பாப்பிரெட்டிப்பட்டி போலிஸ் ஸ்டேஷனில் வைக்கப்பட்டுள்ளாராம். விவசாயி கைது செய்யப்பட்ட தகவல் விவசாயிகளையும், அமைப்புகளையும் அதிர்ச்சியடையவைத்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios