Asianet News TamilAsianet News Tamil

பிரபல பெண் சாமியார் மடத்தில் ஸ்வாகா... ரூ. 200 கோடிக்காண கமிஷனை சுருட்டியது யார்..?

இந்த தகவல் அமிர்ந்தனந்த மாயி அம்மா அவர்களின் காதுகளுக்கு சென்று விட்டால் எங்கள் பிரச்னைக்கு முடிவு காணப்படும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.  

Famous female preacher at the monastery for Rs. Who rolled over Rs 200 crore commission?
Author
Chennai, First Published May 17, 2021, 7:51 PM IST

சுமார் ரூ 200 கோடி ரூபாய்க்கு இடத்தை வாங்கி பத்திரப்பதிவு செய்து கொண்டு அதன் பிறகு கமிஷன் தராமல் தங்களை தவிக்க விடுகிறார்கள் சாத் அமிர்தானந்த மாயி அறக்கட்டளையினர் என கண்ணீர் வடிக்கின்றனர் இடம் வாங்கிக் கொடுத்த அந்த நால்வரும்.

இந்த நால்வரும் ஏமாந்தது எப்படி..? இவர்களை ஏமாற்றியவர்கள் யார்..? அந்த கமிஷன் பணம் எங்கே போனது என்பதை அறியாமல் மூன்றாண்டுகளாக அலைமோதி தவிக்கிறார்கள். இந்த விவகாரம் சாத் அமிர்தனந்த மாயி காதுகளுக்கு சென்றால் எங்களுக்கு விடிவுகாலம் பிறக்கும் என்கிற ஒரே நம்பிக்கை மட்டும் இவர்களிடம் இருக்கிறது. Famous female preacher at the monastery for Rs. Who rolled over Rs 200 crore commission?

ஏமாற்றப்பட்ட ராமகிருஷ்ணன், மகேஸ்வரன், சிவராமகிருஷ்ணன் உள்ளிட்ட நால்வர் நம்மிடம் இது குறித்து கூறுகையில், ‘’நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் விலைக்கு வேண்டும் என எங்களை அமிர்தனந்த மாயி அறக்கட்டளை சார்பாக நாடி வந்தனர். 2018ம் ஆம் ஆண்டு ஓ.எம்.ஆர். ரோடு- ஈ.சி.ஆர் ரோட்டிற்கு இடையில் உள்ள பூஞ்சேரி கிராமத்தில் மொத்தம் 110 ஏக்கர் நிலத்தை மாதா அமிர்தனந்த மாயி அறக்கட்டளைக்காக வாங்கிக் கொடுத்தோம். 

அதில் 57 ஏக்கர் நிலம் முருகப்பா குழுமத்தை சேர்ந்த டி.ஐ சைக்கிள் நிறுவனத்தின் நிர்வாகிகளில் ஒருவரான வெள்ளையன் என்பவருக்கு சொந்தமானது. அமிர்தனந்த மாயி அறக்கட்டளை சார்பாக சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஆசிரமத்தில் இருந்து பெரிய சுவாமிகளான ராமகிருஷ்ண சாமி, விஜய், வினய் அமிர்தா சாமி ஆகியோர் பங்குபெற்று இடம் வாங்குவதற்கான பொறுப்புகளை ஏற்று வந்தனர். டி.ஐ.சைக்கிள் உரிமையாளர் சார்பாக (விற்பனையாளர்) இடைத்தரகர்களாக இருந்தவர்கள் கதிரவனும், தேவேந்திரனும். டி.ஐ சைக்கிள் நிறுவனத்தில் வாங்கிய 57 நிலம் தவிர, மீதமுள்ள 56 ஏக்கர் , அடுத்து 2 ஏக்கர் 5 செண்ட் பதிவு செய்தனர். Famous female preacher at the monastery for Rs. Who rolled over Rs 200 crore commission?

இந்த 2 ஏக்கர் 5 செண்ட் பதிவு செய்ததற்கு மட்டும்தான் கமிஷனாக ரூ.2 லட்சம் (தலா ரூ.50000 என நான்கு காசோலைகளாக கொடுத்தனர். (காசோலை எண் 085838, 000005, 000006, 085836) ஆனால், 110 ஏக்கருக்கான கமிஷன் இரு தரப்பினரிடம் இருந்தும் கிடைக்கவில்லை. நாங்கள் கமிஷன் தொழிலை நம்பியே வாழ்வாதாரத்தை நடத்தி வருகிறோம். ஒன்றரை ஆண்டுகளாக வெவ்வேறு நபர்களிடம் இருந்த அந்த 110 ஏக்கர் நிலத்தை திரட்டினோம். எங்களது சொந்த பணத்தை செலவு செய்தே இந்த வேலைகளை பார்த்து வந்தோம். 

முதலில் இடம் காட்டும் முன்பே 2 சதவிகித கமிஷன் என்கிற எங்களின் கண்டிசனை சொல்லிவிட்டோம். அதனை மடத்தின் சார்பாக வந்தவர்களும் ஏற்றுக் கொண்டனர். ஒரு ஏக்கர் நிலம் ரூ.1 கோடியே 60 லட்சம் எனப் பேசினோம். ஆனால், இவர்கள் பத்திரப்பதிவு செய்யும்போது ஏக்கருக்கு தலா 25 லட்சம் சேர்த்து  ரூ1 கோடியே 85 லட்சம் ரூபாய்க்கு பதிவு செய்துள்ளனர். எல்லா வேலைகளையும் செய்து 110 ஏக்கர் நிலத்தையும் அமைர்தனந்த மாயி மட நிர்வாகம் ஒப்படைத்த பிறகு எங்களுக்கான கமிஷனை தர மறுக்கிறது மடத்தின் நிர்வாகம். கடந்த மூன்றாண்டுகளாக அம்மாவின் நிர்வாகிகளிடம் பேசிப்பார்த்தும் எந்த பலனும் இல்லை. எங்கள் கமிஷன் பணம் எங்கே போனது..? எங்களை ஏமாறுவது யார்..? என்பது எங்களுக்கே தெரியவில்லை

.Famous female preacher at the monastery for Rs. Who rolled over Rs 200 crore commission?

 

கமிஷன் பணத்தை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டு வாழும் நாங்கள் கடந்த மூன்றாண்டுகளாக மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். இந்த தகவல் அமிர்ந்தனந்த மாயி அம்மா அவர்களின் காதுகளுக்கு சென்று விட்டால் எங்கள் பிரச்னைக்கு முடிவு காணப்படும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.  

மன உளைச்சலுக்கும், கவலைக்கும் வறுமைக்கும் உண்டானவர்கள் மடத்தை நோக்கி சென்று அமிர்தானந்தா மூலம் விடிவு காண்பதுதான் இதுவரை வழக்கமாக இருந்தது. ஆனால் மடத்தின் நிர்வாகிகளே அழைத்து இந்த எளியவர்களின் உழைப்பை பெற்றுக்கொண்டு அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நடவடிக்கை எடுப்பாரா சாத் மாயி அமிர்தனந்த மாயி..?

Follow Us:
Download App:
  • android
  • ios