Asianet News TamilAsianet News Tamil

மதுரையில் சிக்கிய போலி ஐஏஎஸ்..! பொறி வைத்து பிடித்த அரசு அதிகாரி.!

மதுரையில் ஐஏஎஸ் அதிகாரி போன்று நடித்து உணவு பாதுகாப்புத்துறை அலுவலரை ஏமாற்றியவரை தல்லாகுளம் போலீஸார் கைது சிறையில் அடைத்தனர்.
 

Fake IAS trapped in Madurai ..! Favorite government official to keep the trap.!
Author
Madurai, First Published Nov 11, 2020, 9:05 AM IST

மதுரையில் ஐஏஎஸ் அதிகாரி போன்று நடித்து உணவு பாதுகாப்புத்துறை அலுவலரை ஏமாற்றியவரை தல்லாகுளம் போலீஸார் கைது சிறையில் அடைத்தனர்.

மதுரையில் உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலராக பணிபுரிபவர் சோமசுந்தரம். இவரது செல்போனுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, ஒருவர் சென்னையில் இருந்து பேசுவதாகக் கூறிப் பேசினார்.

அப்போது, தான் முதல்வர் அலுவலகத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக பணிபுரியும் செந்தில்குமார். தனது சொந்த ஊர் மதுரை என்றும் அறிமுகமாகியுள்ளார். தொடர்ந்து, சோமசுந்தரத்திடம் செல்போனில் பேசிய அவர், துறை சார்ந்த ‘‘ உங்களது நடவடிக்கைகளை நாளிதழ், சமூக வலைதளங்களில் பார்த்தேன். நன்றாக செயல்படுகிறீர்கள் எனப் பாராட்டி இருக்கிறார்.

Fake IAS trapped in Madurai ..! Favorite government official to keep the trap.!

ஒருவேளை அவர் ஐஏஎஸ் அதிகாரியாக இருக்கலாம் என, சோமசுந்தரமும் நம்பினார். ஆங்கிலத்தில் பேசினாலும், அவர் தமிழில் பதிலளித்ததால் ஒரு முறை ‘ நீங்கள் ஐஏஎஸ் தேர்வில் துணைப்பாடமாக எதை எடுத்தீர்கள் ’ என, கேட்டபோது, தமிழை தேர்ந்தெடுத்து எழுதியதாகக் கூறினாலும், அவர் மீதான சந்தேகம் சோமசுந்தரத்திற்கு அதிகரித்துள்ளது. இது தொடர்பாக சென்னையில் அவர் விசாரித்த போது, அப்படியொரு நபர் முதல்வர் அலுவலகத்தில் இல்லை என்பது தெரிந்தது.

மூன்று மாதமாக இருவரும் செல்போனில் பேசி வந்த நிலையில், கடந்த 5 நாட்ளுக்கு முன்பு பேசிய, அந்த நபர் மதுரைக்கு வந்துள்ளதாகவும், தனக்கு மது வாங்கித் தரமுடியுமா என்றும், சென்னைக்கு செல்வதற்கு விமான டிக்கெட், தங்கும் வசதியை ஏற்படுத்தி தருமாறும் கேட்டுள்ளார்.அந்த நபரை போலீஸில் சிக்க வைக்க திட்டமிட்ட சோமசுந்தரம், நவம்பர்,9 ம் தேதி மதுரை விசுவநாதபுரத்திலுள்ள அவரது அலுவலகத்திற்கு வரவழைத்தார்.

ஏற்கெனவே சோமசுந்தரம் கொடுத்த தகவலின்பேரில் தல்லாகுளம் போலீஸாரும் அங்கு வந்தனர். அவர்கள் செந்தில்குமாரிடம் விசாரித்தபோது, அவர், ஐஏஎஸ் அதிகாரி போன்று நடித்து, மோசடி செய்ய முயன்றதும், மதுரை மாவட்டம், சோழவந்தான் வெள்ளாளர் தெருவைச் சேர்ந்த நல்லதம்பி மகன் செந்தில்குமார்  என்பதும் தெரிய வந்தது.

சோமசுந்தரத்தை ஏமாற்றி பணம் பறிக்கும் நோக்கில் செயல்பட்ட அவரை மோசடி வழக்கில் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios