கூவி கூவி விற்பனனயாகும் போலி கௌரவ டாக்டர் பட்டங்களை விநியோகிக்க விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தகவல் மைசூரு காவல்துறைக்க தெரியவர அங்கு சோதனை நடத்தி இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.போலியான டாக்டர் பட்டம் 10ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 சுமார் 150 பேருக்கு போலி கௌரவ டாக்டர் பட்டம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாக விசாரணையின் முடிவில் தெரிவித்துள்ளார் போலீஸ் துணை கமிசனர் பிரகாஷ் கவுடா. இந்த விழாவை ஹன்சூர் சாலையில் அமைந்துள்ள "ருச்சி தி பிரின்ஸ்" ஹோட்டலில் கங்கம்மா தேவி சக்தி பிரீதம் அறக்கட்டளை, தேசிய மனித உரிமைகள் அமைதி கவுன்சில் மற்றும் சர்வதேச உலகளாவிய அமைதி பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்தன. விழாவின் முதன்மை விருந்தினராக காங்கிரசைச் சேர்ந்த எம்.எல்.ஏ. ராமப்பா கலந்து கொண்டார்.

கொரோனா வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படாததால் எம்.எல்.ஏ விழாவில் கலந்து கொள்ளாமல் வளாகத்தை விட்டு வெளியேறியதாக சொல்லப்படுகிறது.ஆனால் எம்எல்ஏவும் பட்டம் பெறும் நபர்களில் ஒருவராக இருந்தார்.டாக்டர் பட்டம் பெற கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆந்திராவில் இருந்து மொத்தம் 142பேர் விழா அரங்கில் கூடியிருந்தனர்.போலீஸ் விசாரணை நடத்தியதல் டாக்டர் பட்டம் வழங்கப்படவில்லை.பட்டம் பெற வந்தவர்கள் பட்டம் வழங்கப்படாததைக்கண்டித்து விழா அரங்கில்சலசலப்பு ஏற்பட்டது.இதுகுறித்து விஜயநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.