Asianet News TamilAsianet News Tamil

பொங்கல் பொருட்கள் விநியோகத்தில் தோல்வி... கொண்டையை மறைக்க மு.க.ஸ்டாலின் எடுக்கும் முயற்சி... அண்ணாமலை அதிரடி..

பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களை குறி வைத்து நிராகரிக்கப்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
 

Failure in the distribution of Pongal items ... MK Stalin's attempt to cover up the robbery ... Annamalai action ..!
Author
Tamil Nadu, First Published Jan 19, 2022, 2:42 PM IST

பொங்கல் பொருட்கள் விநியோகிப்பதில் ஏற்பட்ட தோல்வியை மறைக்கவே குடியரசுத் தினவிழா ஊர்வலத்தை திமுக அரசு கையில் எடுத்துள்ளது என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.Failure in the distribution of Pongal items ... MK Stalin's attempt to cover up the robbery ... Annamalai action ..!

ஆண்டு தோறும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழாக்களில்சுதந்திரப் போராட்ட வீரர்களின் படங்களை கொண்ட வாகனங்களின் அணிவகுப்பு நடைபெறும். இப்படியான சூழலில் வரும் 26ம் தேதி குடியரசு தினத்தையொட்டி நடைபெறும் அணிவகுப்பில் வ.உ.சிதம்பரனார், வேலுநாச்சியார், பாரதியார் உள்ளிட்டோர் இடம்பெற்றிருக்கும் தமிழகத்தின் அலங்கார வாகனத்தை மத்திய அரசு நிராகரித்துள்ளது.
 
மிகவும் பிரபலமான சுதந்திர போராட்ட வீரர்களை எதிர்பார்ப்பதாகவும், வ.உ.சி. வேலுநாச்சியார் போன்றவர்களை சர்வதேச தலைவர்களுக்கு தெரியாது என்பதால் நிராகரிக்கப்பட்டதாக மத்திய அரசு கூறியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும், தென் மாநிலங்களை பொறுத்தவரை கர்நாடகத்தை தவிர கேரளம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களின் வாகனங்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன. முன்னதாக, சுபாஷ் சந்திர போஸ் உள்ளிட்ட தலைவர்களின் படங்களை தாங்கிய மேற்கு வங்க வாகனத்தை மத்திய அரசு நிராகரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமருக்கு கடிதம் எழுதியது. பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களை குறி வைத்து நிராகரிக்கப்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.Failure in the distribution of Pongal items ... MK Stalin's attempt to cover up the robbery ... Annamalai action ..!

இந்நிலையில் தமிழகத்தில் நடைபெறும் குடியரசு தின விழாவில், மத்திய அரசால் நிராகரிக்கப்பட்ட தலைவர்களின் சிலைகள் இடம்பெறும் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில், ‘’2019, 2020 & 2021 ஆண்டுகளில் தமிழ்நாடு ஊர்வலத்தில் பங்கேற்க இதே அதிகாரிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டது. அப்படியிருக்க தற்போது மட்டும் ஏன் தேர்ந்தெடுக்கப்படவில்லை? பொங்கல் பொருட்கள் விநியோகிப்பதில் ஏற்பட்ட தோல்வியை மறைக்கவே குடியரசுத் தினவிழா ஊர்வலத்தை திமுக அரசு கையில் எடுத்துள்ளது. குடியரசு தின விழா ஊர்வலத்தில் தமிழ்நாடு பங்கேற்காததை மறைக்கவே திமுக அரசு நாடகமாடுகிறது;Failure in the distribution of Pongal items ... MK Stalin's attempt to cover up the robbery ... Annamalai action ..!

“1967-இல் இருந்து திமுக ஆட்சி காலத்தில், உள்நோக்கத்துடன் வடிகட்டிய வரலாற்றைதானே வகுப்பறையில் கொடுத்தீர்கள். கோரோன பரவல் காரணமாக தேர்தல் பிரச்சாரம் ஆன்லைனில் செய்ய பாஜக தயார். திமுக தயாரா..?'’ எனத் தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios