எம்ஜிஆர் அவர்கள் இறந்த போது ஜெ.ஜெ.அம்மாவுக்கு இருந்த நெருக்கடிகளை எதிர்ப்புகளை தூள் தூளாக்கியவர் சின்னம்மா, ஜெ.ஜெ அம்மாவுக்கு அல்வா கொடுக்க நினைத்தவர்களை அட்ரஸ் இல்லாமல் ஆக்கியவர் சின்னம்மா? என அமமுக  நிர்வாகி புகழ்ந்து தள்ளியுள்ளார்.

தமிழகத்தில் 17வது மக்களவை தேர்தல் மற்றும் 22 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவைக் எதிர்பார்த்து காத்திருந்த தினகரனின் அமமுகவிற்கு பலத்த அடி கிடைத்தது. இதனால் ,அக்கட்சியின் எதிர்காலம் முடிந்துவிட்டது என அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கருத்து தெரிவித்தன. 

இதுகுறித்து அமமுக ஆதரவாளர் ஒருவர் தனது முகநூலில் சசிகாவை புகழ்ந்து பதிவிட்டுள்ளார். அதில், எம்ஜிஆர் அவர்கள் இறந்த போது ஜெ.ஜெ.அம்மாவுக்கு இருந்த நெருக்கடிகளை எதிர்ப்புகளை தூள் தூளாக்கியவர் சின்னம்மா தினகரன். 

"அன்று சேவல் புறா சின்னம்" சேவல் சின்னம் 29 இடங்களில் வெற்றி பற்று மகத்தான வெற்றியை தேடி. தந்தவர் சின்னம்மா மறந்து விட முடியுமா? ஜெ.ஜெ அம்மாவுக்கு அல்வா கொடுக்க நினைத்தவர்களை அட்ரஸ் இல்லாமல் ஆக்கியவர் சின்னம்மா? ஆர்எம் வீரப்பன் சூழ்ச்சியை முறியடித்து இரட்டை இலையை கைப்பற்ற அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பென செய்தவர் சின்னம்மா.

இன்று வந்தவர் எல்லாம் பல்லவி பாடும் அளவுக்கு மனித நேயம் மாறி செயல்படும் மகான்களாக திரியும் குதர்க்கவாதிகளை சிதறடிப்போம் என தனது  அழுத்தமாக பதிவிட்டுள்ளார். இந்த பதிவானது முகநூல், ட்விட்டர், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சோசியல் மீடியா பக்கங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.