Asianet News TamilAsianet News Tamil

அசாமில் மீண்டும் ஆட்சியமைக்கிறது பாஜக..! அடித்துக்கூறும் தேர்தலுக்கு பிந்தைய சர்வே முடிவுகள்

அசாமில் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் அனைத்தும் தெரிவிக்கின்றன.
 

exit polls reveals bjp will form government in assam again in 2021
Author
Assam, First Published Apr 29, 2021, 8:16 PM IST

தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம், கேரளா, புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் நடந்து முடிந்துள்ள சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குகள் வரும் மே 2ம் தேதி எண்ணப்படுகின்றன. 

மேற்குவங்கத்தில் கடைசிக்கட்ட(8ம் கட்ட) வாக்குப்பதிவு இன்று முடிந்த நிலையில், தேர்தல் நடந்த 5 மாநிலங்களிலும் எந்தெந்த கட்சிகள் ஆட்சியமைக்கும் என்று நடத்தப்பட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, தமிழ்நாட்டில் திமுக கூட்டணி ஆட்சியமைக்கும் என்றும் மேற்குவங்கத்தில் பாஜக - திரிணாமூல் காங்கிரஸ் இடையே கடும் இழுபறி நீடிக்கும் என்றும் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

126 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட அசாமில் 79 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைக்கும் என்று ரிபப்ளிக் - சி.என்.எக்ஸ் இணைந்து நடத்திய சர்வே தெரிவிக்கிறது. காங்கிரஸ் 45 தொகுதிகளிலும், மற்ற கட்சிகள் 1-3 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பிருப்பதாகவும் சி.என்.எக்ஸ் சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன.

டைம்ஸ் நவ்  நடத்திய தேர்தலுக்கு பிந்தைய சர்வேயில், பாஜக 65 தொகுதிகளில் வென்று ஆட்சியமைக்கும் என்றும், காங்கிரஸ் 59 தொகுதிகளிலும் மற்ற கட்சிகள் 2 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும்  தெரிவிக்கின்றன.

பாஜக ஆட்சியில் இருந்த அசாம் மாநிலத்தில், பாஜக கண்டிப்பாக ஆட்சியை தக்கவைக்கும் என்றே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் அனைத்தும் தெரிவிக்கின்றன.
 

Follow Us:
Download App:
  • android
  • ios