சாலிகிராமம் பகுதிகளில் சாலைகள் குண்டும், குழியுமாக இருப்பதால் போக்குவரத்து சிரமமாக உள்ளதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் ஆண்டாள் அழகர் இல்லம் சென்னை சாலிகிராமம் பகுதியில் அமைந்து இருக்கிறது. இந்நிலையில் அவர் சென்னை, சாலிகிராமம் பகுதியில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக இருக்கிறது சாலைகளில் மழைநீர் தேங்கிக் கிடக்கிறது. இதனால் போக்குவரத்து கடினமாகிறது. மக்கள் அவஸ்திபட்டு வருகின்றனர். அவற்றை சரி செய்ய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.   

சட்டப்பேரவையில் சென்னை முழுவதும் சாலை பாதுகாப்பு பணிக்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 300 கோடி, தமிழகம் முழுவதும் சாலை சீரமைப்புக்காக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ரூ.1000 கோடி அறிவித்ததை மக்கள் பயன்பாட்டிற்கு உடனடியாக கொண்டுவந்து பாதுகாப்பான பயணத்தை ஏற்படுத்தித் தர வேண்டும். மழைக்காலம் தொடங்கி உள்ளதால் நீர்நிலைகளை தமிழக அரசு தூர்வார வேண்டும். மழை நீரை சேமிக்க அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.