’பொது வாழ்க்கையில இருக்கிவனுக்கு பொம்பளைங்க நட்பு கொஞ்சம் முன்ன பின்னதான் இருக்கும். நீதான் அனுசரிச்சுக்கோணும் அம்மணி! ஒன்ற கைக்குள்ளே வெச்சுக்கிட்டேன்னா, எதுக்கு கண்ணு அவன் வெளியில சுத்துறான்!’ - மாஜி வி.வி.ஐ.பி.யின் அக்காளே தன் தம்பி பொண்டாட்டியிடம் இப்படியொரு டயலாக்கை பேசுவதை, எந்த சீரியலின் கள்ளக்காதல் எபிசோடிலும் நீங்கள் பார்த்திருக்க முடியாது. 
அப்படியென்றால் அந்த வி.வி.ஐ.பி. ‘அந்த’ விஷயத்தில் எந்தளவுக்கு வீக்கு!...மன்னிக்கவும் எக்ஸ்ட்ரா ஸ்டிராங்கு என்பதை நீங்களே யூகிச்சுக்கோங்க மக்கழே!

ஆறு அடி உயரம், ஆஜானுபாகுவான உடம்புடன் அந்த வி.வி.ஐ.பி.யைப் பார்த்தேலே பரவசமாய் இருக்கும். முகம் ஒன்றும் அம்பூட்டு வசீகரம் கிடையாது, நாலனா பன்னை நாற்பது நிமிஷம் பாலில் ஊற  வெச்சிருந்தால் மொசுக்கு மொசுக்குன்னு விம்மிக் கிடக்குமே அப்படித்தான் இருக்கும். ஆனால் யாரையும் எதிர்த்து நிற்கின்ற நாட்டுக் கட்டை மனிதர்.  கட்சி கரைவேஷ்டியின் நுனியை ஒரு கையில் தூக்கிப் பிடித்தபடி அவர் நடந்து வரும் கம்பீரத்துக்கு, மாற்றுக் கட்சி மகளிரணிகள் கூட மடங்கிப்போகும் மடங்கி. 

ஒரு முறை கட்சி சார்பாக ஒரு ஆர்பாட்டம். வீதியில் இறங்கி நடந்த இவரை போலீஸார் தடுக்கின்றனர், ரெண்டு டி.எஸ்.பி., நாலு இன்ஸ்பெக்டர்கள், ரெண்டு மூணு கான்ஸ்டபிள்கள் இத்தனை பேர் ரவுண்டு கட்டி அமுக்கியும் மனுஷன் அடங்கவில்லை. இவர்கள் அத்தனை பேரையும் இழுத்தபடி அந்த மெயின் ரோட்டில் கிட்டத்தட்ட முந்நூறு அடிகள் இவர் திமிறி நடந்த வேகத்தைப் பார்த்து சொக்கிவிட்டன சொந்தக் கட்சி சுந்தரிகள். 

இந்த முரட்டுக் காளை மடங்குவதென்னவோ மல்லிகை மங்கைகளிடம்தான். இளம் சிட்டுக்கள் எம்பூட்டு மாடர்னாக டிரெஸ் பண்ணிக் கொண்டு போனாலும் அண்ணனுக்கு ‘அந்த பீலிங்கி’ வராது. ஆனால் டையால் கறுத்த தலையில் மல்லிப்பூவை வெச்சுக்கிட்டு, சுகர் ஏறிய உடம்புடன் தள்ளாடி நடக்கும் சீனியர் மகளிர் அணி நிர்வாகியை கண்டாலும் போதும், அண்ணனுக்கு இருப்பே கொள்ளாது. ’ஏனுங்க ஆண்ட்டி, அட எங் போறீங்கோ?’ என்றபடி பின்னாடியே போய்விடுவார். அப்புறம்....

ஹய்யோ ஹைய்யோ! அந்த கதையை என் வாயாலே ஏன் சொல்லணும் போங்கோ. 

இவரோட கூத்துக்கள் தலைமை வரை கசிந்திருந்தாலும் கூட ’என்னய்யா ஒம் மேலே ஏகப்பட்ட புகார் வருது, ஒழுக்கமா இருக்க மாட்டியா? பெரிய பொலி காளைன்னு நினைப்போ?’ என்று சிரித்தபடி மேலிடம் கேட்கும் கேள்விக்கு இவர் தலையை சொறிவதை மட்டுமே பதிலாக தந்துவிட்டு எஸ்கேப் ஆகிவிடுவார். 

இப்படிப்பட்ட மல்லிகைப்பூ மன்னன், ஒரு தடவை பக்கத்து மாவட்டத்துக்கு கட்சி நிகழ்ச்சிக்காக வந்திருந்தார். கட்சியின் முக்கிய புள்ளி மேடையில் வீற்றிருக்க, இவரோ முக்கிய மனிதர்களுடன் ஒருவராக முன் வரிசையில் அமர்ந்திருந்தார். அந்த நேரத்தில் அந்த மாவட்டத்தை சேர்ந்த கட்சி லேடி ஒருவர் கூட்டத்தில் எண்டர் ஆனார். 

பளீர் சில்க் காட்டன் புடவையில், கால்வாசி கைகளுக்கு வளையல்கள் அடுக்கி, கேரள பொண்ணுங்க ஸ்டைலில் நீர் ஜடை பின்னிப்போட்டு அதில் சுமார் ஐந்து முழம் மல்லிப்பூவை படர கோர்த்துவிட்டு, அதில் இரண்டு முழங்களை எடுத்து முன்பக்கமாய் தொங்கவிட்டபடி மணக்க மணக்க அவர் வந்தமர்ந்தார். சைடிலிருந்து பார்க்கும் யாராலும் அந்த மங்கையின் பரந்த முகத்தை மட்டும் கவனிக்கும் வாய்ப்பில்லை, கண்கள் இரண்டு சான் கீழே இறங்கி மிரண்டு பெருமூச்சு விட்டே தீரும் வகையில்தானிருந்தது. 

மேடையிலிருந்த அந்த பெரிய மனிதரின் கண்களில் துவங்கி அத்தனை கண்களும் அவர் மேல்தான் பாய்ந்து திரும்பின. முன் மற்றும் பின் வரிசை வி.ஐ.பி.க்கள் பலருக்கு பெருமூச்சாகிப் போச்சு. குறும்புக்கார இளைஞரணி பையன் ஒருவர் ‘ஏனுங்கா, மைசூர் சாண்டல் சோப்புங்களா? ச்சும்மா கும்முன்னு தூக்குதே!’ என்று கிண்டலடிக்க, அம்மணிக்கு ஒரே வெட்கச் சிரிப்பு. 

சற்றே மங்கிய நிலவொளியில், மந்தகாசமாய் இந்த மல்லிப்பூ மங்கை உட்கார்ந்திருந்த ஸ்டைலை பார்த்ததும் நம்ம வி.வி.ஐ.பி.க்கு இடுப்பு நாற்காலியில் உட்காராமல் அடம்பிடிக்க துவங்கியது. திமிறி திணறிக் கொண்டு வந்தவர், ஒரு கட்டத்தில் மொபைலை எடுத்து யாருக்கோ மெசேஜ் போட்டோர். அடுத்த சில நொடிகளில் அம்மணியின் நம்பர் இவரது மொபைல் இன்பாக்ஸில் வந்து கண்ணடித்தது. 

மளமளவென அந்த நம்பருக்கு தட்டுத் தடுமாறிய தமிழில் டைப் செய்து போட்டார் (அந்த அம்மணிக்கு இங்கிலீஸு தெரியாது என்பது எக்ஸ்ட்ரா மைலேஜ்). அடுத்த நொடியில் அவரிடமிருந்து பதில் மினுங்கியது, அதற்கு இவர் பதில் தர என்று தகவல்கள் தாம்தூமென பரிமாறப்பட்டன. அடுத்த சில நிமிடங்களில் மெதுவாக இருக்கையிலிருந்து எழுந்த அந்த வி.வி.ஐ.பி. ‘அண்ணா யூரின் போயிட்டு வந்துடுறேன்’ என்று பக்கத்திலிருந்த மாஜி அமைச்சரிடம் சொல்லிவிட்டு நேரடியாக தன் காருக்குள் சென்று பதுங்கினார். 
அந்த காரும், வி.வி.ஐ.பி. பார்க்கிங் பகுதியிலிருந்து சற்று தள்ளி ஒரு புதர் போன்ற ஏரியாவினுள் போய் பதுங்கியது. 

அடுத்த நொடியில் மல்லிகை அம்மணியின் மொபைலில் மெசேஜ் சிணுங்கியது. இந்த கார், இந்த நம்பர்,  இந்த இடத்தில் இருக்கிறது...என்ற தகவல்களை போட்டு ‘உடனே வா! என்னால முடியல’ என்று பொங்கி வழிந்தார். 

உள்ளூர ரசித்தாலும் கூட, அவ்வளவு பெரிய கூட்டத்தில் அம்மாம் பெரிய நபரின் முன்னாடி உட்கார்ந்திருக்கையில், எழுந்து போனால் பெயர் கெட்டுப்போகாதா? இதை சொல்லி ‘மீட்டிங் முடிஞ்சதும் மீட் பண்ணலாம்!’ என்று மறுத்தார் மங்கை. ஆனால் அவரோ ‘மீட்டிங் முடிஞ்சதும் வேற எவனாச்சும் உனக்கு கட்டையை போட பார்ப்பான். எவன் கண்ணும் அங்கே சரியில்ல. வாடா சீக்கிரம்’ என்று மிஞ்சலும், கெஞ்சலுமாக பதில் தந்தார். அதற்கும்  அந்த லேடியிடமிருந்து மறுப்பு. இப்படியாக பத்து பதினைந்து நிமிடம் கழிந்தது. 

ஒரு கட்டத்தில் பின் வரிசையிலிருந்த இரண்டாம் கட்ட நிர்வாகி ஒருவர் அம்மணியின் காதோரமாய் நகர்ந்து ‘நீங்களா போயிடுங்க. இல்லேன்னா அந்த மனுஷன், கூட்டத்துக்குள்ளே புகுந்து தூக்கிட்டு போனாலும் ஆச்சரியமில்ல.’ என்று ஓத, அம்மணிக்கு தூக்கி வாரிப்போட்டது. ‘அப்ப இங்கே நடக்குறதை ஒட்டுமொத்த முக்கியஸ்தர்களும் கவனிச்சுட்டுதான் இருக்காங்களா?’ என்று அலறினாலும் வேறு வழியில்லாமல் எழுந்து போனார். 

மேடையின் பக்கவாட்டில் நடந்து இவர் குறிப்பிட்ட காரை நோக்கி நகர்வதை பல நூறு ஜோடி கண்கள் கவனித்துக் கொண்டே இருந்தன. கதவு திறந்தது, பர்ஃப்யூம் மணந்தது. அந்த செயற்கை வாசத்துடன் மகளிர் அம்மணியின் இயற்கை மல்லிகை வாசமும் இணைந்து கலக்க, வார்த்தை ஏதுமில்லாம சட்டென அள்ளி அணைத்துக் கொண்டார் வி.வி.ஐ.பி. 

பல விழிகள் காரின் உள்ளே ஜூம் செய்ய முயன்றன, ஆனால் அடுத்த நொடியில் அந்த ஹைடெக் வாகனத்தின் ஹெட்லைட்டுகள் பவர்ஃபுல்லாய் ஒளியை உமிழ, உள்ளே உள்ள விஷயங்கள் போகஸ் அவுட் ஆகின. சுமார் அரை மணி நேரத்துக்குப் பிறகு தலையை கோதியபடியே காரை விட்டு இறங்கினார் அம்மணி. 

தலையில் பூ மட்டுமில்லை பூ வாசம் இருந்ததற்கான அடையாளம் கூட இல்லை. 

பிரித்து மேய்ஞ்சுட்டார் போல வி.வி.ஐ.பி. இந்தக் கதையை சொல்லி கிளுகிளுப்பாய் சிரிப்பதே அந்த மாவட்ட கழகத்தினரின் ஒரே பொழுதுபோக்கு.