ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட முன்னாள் முதலமைச்சர் கமல்நாதிற்கும் தற்போதைய முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கும் இடையிலான வார்த்தைகளின் போர், மத்திய பிரதேச அரசியலில் கொரோனாவை காட்டிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான கமல் நாத், 'சிவராஜ் சிங்சௌகானை மாமா என கேலி செய்தும், பிரதமர் நரேந்திர மோடி ஒருபோதும் விற்காத தேநீர் எனவும் கேலி செய்திருந்தார்.

"நான் ஒருமகாராஜா அல்ல. நான் புலி அல்ல. நான் மாமா அல்ல. நான் ஒருபோதும் தேநீர் விற்கவில்லை. நான் கமல்நாத். புலி யார்? யார் பூனை, எலி யார் என்பதை மத்தியப் பிரதேச மக்கள் முடிவு செய்வார்கள்” என்று தார் மாவட்டத்தில் பத்னாவரில் உள்ள கட்சித் தொண்டர்களிடையே பேசினார் கமல் நாத்."
இது அவர்களுக்குள் பெரும் வார்த்தை போராக முற்றிப்போயிருக்கிறது.இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை முதலமைச்சராக இருந்த கமல்நாத் மத்தியப் பிரதேசத்தை அழித்துவிட்டார் எனவும் முழு மத்திய பிரதேசத்தையும் அழித்துவிட்டார். அவர் என்ன செய்தாலும் அதன் முடிவை அரசு எதிர்கொள்கிறது. நாங்கள் அதை மக்கள் முன் கொண்டு வருவோம், என்று முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் பொங்கி எழுந்திருந்தார்.

முந்தைய காங்கிரஸ் அரசாங்கம் ஆட்சியில் இருந்தபோது ஊழல் நடந்ததாகக் கூறும் ஆளும் பாரதீய ஜனதா கட்சி தொடங்கிய எந்தவொரு விசாரணையையும் தாம் வரவேற்கிறேன் என்றும் அரசாங்கம் அனைத்து குற்றச்சாட்டுகளையும் முழுமையாக விசாரிக்க வேண்டும். அவர்களின் 15 ஆண்டு ஊழல் நிலைப்பாடு அம்பலப்படுத்தப்பட்ட நிலையில், இப்போது அவர்கள் எனது அரசாங்கம் ஆட்சியில் இருந்தபோது 15 மாதங்கள் குறித்து மட்டுமே விசாரிக்க விரும்புகிறார்கள். எனினும் எந்தவொரு விசாரணையையும் நான் வரவேற்கிறேன்." என்கிறார் கமல்நாத்