திருப்பூர் அதிமுக முன்னாள் எம்.பி. சத்தியபாமாவின் கணவர் தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், விடுதி பெண் உரிமையாளரிடம் எனக்கு ஒரு பொண்ணு வேணும் என்று கூறி மிரட்டியுள்ளார். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

திருப்பூர் முன்னாள் எம்.பி. சத்தியபாமாவின் கணவர் வாசு. இவர்கள் கோபிசெட்டிபாளையம் ஸ்ரீநகரில் வசித்து வருகிறார். இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் பாஸ்கரன் வீதியை சேர்ந்தவர் சாமுவேல் மனைவி நிர்மலா (45). இவர் கோபியில் கடந்த 12 ஆண்டுகளாக லாட்ஜ் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இவர் வீட்டில் இருந்தபோது செல்போனி்ல் திருப்பூர் முன்னாள் எம்.பி. சத்தியபாமாவின் கணவர் வாசு அழைத்துள்ளார். இருவருக்கும் நடந்த உரையாடலின்போது, தான் உல்லாசமாக இருக்க பெண் வேண்டும் என வாசு மிரட்டி உள்ளார். 

இதுதொடர்பான உரையாடல் வருமாறு:-

வாசு: எப்படி இருக்கீங்க நிர்மலா..? எங்க இருக்கீங்க...? சென்னையா? பெங்களூரிலேயா...?  

நிர்மலா: நான் கோபியில்தான் இருக்கேன். நான் எதுக்கு பெங்களூர் போறேன்?

வாசு: உங்ககிட்டே கேட்க கூடாதுதான். நானும் நீங்களும் எவ்வளவு பிரெண்டுனு உங்களுக்கே தெரியும். உங்க லாட்ஜ்ல என்ன நடக்குதுனு உங்களுக்கே தெரியும். எனக்கு ஒரு பொண்ணு வேணும்.

நிர்மலா: என்ன சொல்றீங்க? என்ன சொல்ல வர்றீங்கனு புரியலை.

வாசு: நிர்மலா லாட்ஜ்ல என்ன நடக்குதுனு எல்லாமே நடக்குதுல.

நிர்மலா: நீங்க தேவை இல்லாதத பேசறமாதிரி இருக்கு.

வாசு: உங்களுக்கு தெரியலையா? இல்ல புரியலையா?

நிர்மலா: நான் லாட்ஜ்க்கு மாதம் ஒருமுறை போயி அக்கவுண்ட் பார்ப்பேன் அவ்வளவுதான். இப்போ எதுக்கு தேவை இல்லாத பேசறீங்கனு புரியல.

வாசு: ஆக்சுவலா உங்க லாட்ஜ்ல இரண்டு வருசத்துக்கு முன்னாடி ரூம் போட்டு இருந்தேன். உளவுத்துறை கூட எதுக்காக அங்க ரூம் போட்டீங்க? என்ன சமாச்சாரம்னு விசாரிக்கறாங்க.

நிர்மலா: 12 வருசமா லாட்ஜ் நடத்துறேன். போலீசார் கூட தங்கறாங்க. அவங்ககிட்ட கூட ஐடி கார்டு வாங்கிட்டுதான் ரூம் கொடுக்கறேன். இப்போ தங்கறவங்ககிட்டே கேட்காமல் இரண்டு வருசத்துக்கு முன்னாடி தங்குன உங்க கிட்டே எதுக்கு கேட்கறாங்க? நீங்க இப்போ எவன் பேச்சை கேட்டு இந்த மாதிரி பண்றீங்கனு தெரியலை.

வாசு: நான் யார் பேச்சையும் கேட்டு பேசலை. நீங்க வெய்ட் பண்ணுங்க. அங்க ஏதாவது தப்பா நடந்தா அடுத்த செகன்டே கேசு ஆயிடும்.

நிர்மலா: ஆயிட்டு போகட்டும். உங்களுடைய தகுதிக்கு இவ்வளவு கேவலமா நடந்து இருக்க கூடாது. இவ்வாறு உரையாடல் செல்கிறது. 

இந்த உரையாடல் தொடர்பாக நிர்மலா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த ஆடியோவில் இடம் பெற்றுள்ளது வாசுவின் குரல்லா என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே அதிமுகவில் எம்.பி.யாக இருந்த சத்தியபாமா கொலை செய்ய முயன்ற வழக்கில் அவரது கணவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.