EVKS Elangovan condemned

சென்னையில் வெள்ள பாதிப்பு ஆண்டுதோறும் தொடரும் நிலையில், முன்னேற்பாடு செய்திருப்பதாக தமிழக அமைச்சர்கள் கூறுவது பொய்யான தகவல் என்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தமிழகத்தில் பருவமழை திவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில், தண்ணீர்
தேங்கியுள்ளது.

வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கையாக உள்ளது என்று தமிழக அமைச்சர்கள் கூறி வந்தனர். இது தொடர்பாக தமிழக காங்கிரஸ்
முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், சென்னை வெள்ள பாதிப்பு ஆண்டுதோறும் தொடரும் நிலையில் முன்னெட்றபாடு செய்திருப்பதாக
தமிழக அமைச்சர்கள் கூறுவது பொய்யான தகவல் என்று கூறியுள்ளார்.

திருப்பூரில், இன்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர் இவ்வாறு கூறினார். மேலும், பேசிய அவர், ஜனநாயகத்தை விட்டு மோடி சர்வாதிகாரத்தை
கடைப்பிடித்து வருவது மக்களை அதிக பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது என்றார்.

தமிழக காவல்துறை, மக்கள் பணியாற்றுவதை விட்டுவிட்டு, முதலமைச்சர் எடப்பாடி பாதுகாப்பு பணியில் அதிகம் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். கோவையில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சேலம் செல்வதற்கு நான்கு மாவட்ட போலீசார் சாலைகளில் நிற்க வைக்கப்படுவது கண்டனத்துக்குரியது என்றார்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், அனைத்து அரசியல் தலைவர்களையும் இழிவாக பேசுவது கண்டிக்கத்தக்கது. நடிகர் கமல் ஹாசென் அரசியலுக்கு வருவது மகிழ்ச்சிக்குரியது என்றும் அவர் தனிப்பட்ட முறையில் செயல்பட வேண்டும் என்றும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.