தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ஈவிகேஎஸ்.இளங்கோவன் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ஈவிகேஎஸ்.இளங்கோவன் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவராகவும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஈவிகேஎஸ்.இளங்கோவன் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பினார். இதை தொடர்ந்து தனது வழக்கமான பணிகளை கவனித்து வந்தார். 

இந்நிலையில், நேற்று அதிகாலை திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, உடனடியாக அவர் ராமபுரத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு ஈவிகேஎஸ்.இளங்கோவனுக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அவரது உடல் நிலை குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் விசாரித்து வருகின்றனர்.