சசிகலா முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சரமாரி குற்றச்சாட்டுக்களை அடுக்கியுள்ளார்.

மக்களால், தேர்ந்தெடுக்கப்படாத ஒருநபர், மக்களுக்கு பிடிக்காத ஒருநபர், தமிழகத்தின் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது தமிழகத்துக்கே அவமானம் என கொக்கரித்தார்.

மேலும், சசிகலா முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளதால், அதிமுக மண்ணை கவ்வும் என்றும், இதன் எதிரொலியாக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக படுதோல்வி அடையும் என்றார்.

உள்ளாட்சி தேர்தலிலா அல்லது இடை தேர்தலிலா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், “இடை தேர்தலில் நிற்க போகும் சசிகாலவுக்கு டெபாசிட் கூட கிடைக்காது” என சரவெடியோக வெடித்தார்.