திமுகவினர் மீது அதிமுகவினரின் தூசு பட்டால் கூட அதிமுககாரனின் கை இருக்காது என திமுக மாவட்டச்செயலாளர் வன்முறையை தூண்டும் வகையில் பேசி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

திருவள்ளூர் வடக்கு மாவட்டம், கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் கவரப்பேட்டையில் உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை நடைபெற்றது. அந்த விழாவில் தலைமையேற்று பேசிய திருவள்ளூர் மாவட்ட திமுக செயலாளர் கும்மிடிப்பூண்டி கி.வேணு, யாரும் பயப்படாதீங்க. நம்மள பார்த்து தான் அண்ணா திமுக.,காரன் பயப்படணும்.  நம்ம ஆளுங்க மேல அதிமுககாரனின்ர் மீது தூசு பட்டால்கூட அதிமுகவினர் கை இருக்காது. மொத்தமா தூக்கிடிவோம்" என்று அவர் வன்முறையை தூண்டும் விதமாக பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

 

திமுக மாவட்டச் செயலாளரே இப்படி வன்முறையை தூண்டும் வகையில் பேசலாமா? என பிற கட்சியினர் விவாதித்து வருகின்றனர்.