Asianet News TamilAsianet News Tamil

அரசு 1 ரூபாய் செலவு செய்தாலும் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைய வேண்டும்.. கெத்து காட்டும் முதல்வர் ஸ்டாலின்.!

ஒவ்வொரு மாவட்டத்திலும் நிறைவேற்றப்பட வேண்டிய புதிய திட்டங்கள் குறித்து ஆலோசனைகள் இருந்தால், நீங்கள் இங்கே கூறலாம். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு விதமான பொருட்கள் கிடைக்கிறது. 

Even if the government spends 1 rupee, it should reach the people... MK Stalin
Author
Chennai, First Published Mar 11, 2022, 12:21 PM IST

அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைகிறதா என்பதையும் நேர்மையான வெளிப்படையான நிர்வாகத்தினையும் மாவட்ட ஆட்சியர்கள் உறுதி வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

2வது நாள் மாநாடு

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் மாவட்ட ஆட்சியர்கள் காவல்துறை மற்றும் வனத்துறை அலுவலர்கள் 2வது நாள் மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. 2வது நாள் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின்,  ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் தங்களது மாவட்டங்களில் நிறைவேற்றக் கூடிய திட்டங்கள் குறித்து கள நிலவரத்தை விரிவாக எடுத்துரைக்க வேண்டும் என்றார்.

இதையும் படிங்க;- திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் இப்படி நடக்குது.. மீண்டும் வேலையை காட்ட ஆரம்பித்த TTV..!

Even if the government spends 1 rupee, it should reach the people... MK Stalin

அரசு செலவழிக்கும் 1 ரூபாய் கூட கடைக்கோடி மக்களுக்கும் செல்ல வேண்டும்.

எங்களுக்கும், உங்களுக்கும் அதாவது, எங்களைப் போன்ற அரசியல்வாதிகளுக்கும், உங்களைப் போன்ற அதிகாரிகளுக்கும் மக்கள் தான் எஜமானர்கள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. ஆகவே, ஒரு ரூபாய் செலவு செய்தால், அந்த ஒரு ரூபாய் சிந்தாமல், சிதறாமல் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைய வேண்டும். அதுதான் சிறந்த நிர்வாகத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்திட முடியும். ஒவ்வொரு மாவட்டத்திலும் நிறைவேற்றப்பட வேண்டிய புதிய திட்டங்கள் குறித்து ஆலோசனைகள் இருந்தால், நீங்கள் இங்கே கூறலாம். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு விதமான பொருட்கள் கிடைக்கிறது. 

Even if the government spends 1 rupee, it should reach the people... MK Stalin

வெளிப்படையான நிர்வாகம் 

அது மஞ்சளாக இருக்கலாம், இயற்கை வளங்கள் அதிகமாக இருக்கலாம். அவற்றை எப்படி மார்க்கெட் செய்வது, அதிலிருந்து எப்படி அரசிற்கு வருமானத்தைப் பெருக்குவது என்பது குறித்தும், விவசாயிகள், தொழிலாளர்கள், சிறுதொழில், பெருந்தொழில் உள்ளிட்ட அனைவருக்கும் பயனளிக்கக்கூடிய திட்டங்கள் என்னென்ன என்பது குறித்த கருத்துக்களையெல்லாம் நீங்கள் இங்கே தெரிவிக்கலாம் எனக் கேட்டு, நேர்மையான நிர்வாகம், வெளிப்படையான நிர்வாகம் என்பதை மனதில் வைத்துக் கொண்டு, உங்களுடைய ஆலோசனைகளை சுதந்திரமாக நீங்கள் கூறலாம் என்று கேட்டு, அந்த வகையில் உங்களுடைய கருத்துக்களைக் கேட்பதற்கு நான் ஆர்வமாக இருக்கிறேன்" என்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios