நாடாளுமன்ற தேர்தலில் 38 இடங்களில் நாம் வெற்றி பெற்றுள்ளோம். தேனி தொகுதியில் மட்டும் அதிமுக உறுப்பினர் வெற்றி பெற்றார். ஆனால் அவர் அதிமுகவின் உறுப்பினராக அல்ல பிஜேபியின் உறுப்பினராக செயல்பட்டு வருகிறார்.
கொடுமையான வெயில் வாட்டி வதைக்கிற பொழுதும் பொதுமக்கள் அனைவரும் கூடி நிற்பது என்றால் இந்த கொடுமையான வெப்பத்தை விட கொடுமையான ஆட்சியை விரட்டி அடிப்பதற்கு என்று என்னால் புரிந்து கொள்ள முடிகிறது என திமுக தலைவர் ஸ்டாலின் மதுரை தேர்தல் பரப்புரையில் உரையாற்றினார்.
திமுகவின் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் மதுரை பழங்காநத்தம் பகுதியில் பொதுமக்களிடையே உரையாற்றினார், அப்போது பேசிய அவர், தமிழ் மொழியை காக்க ஹிந்தியை எதிர்த்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடியை ஏந்தி, தமிழ் கொடியை ஏந்தி போராடிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் தலைவர் கலைஞரின் மகன் நான் உங்களைத் தேடி வந்துள்ளேன். நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் அல்ல நான். கலைஞரின் மகன் நான். கலைஞரால் உருவாக்கப்பட்டவன் நான். தொடர்ந்து கட்சியின் அடிமட்ட பதவியிலிருந்து உயர் பதவி முடிய வகித்து தற்சமயம் இந்த நிலைக்கு நான் வந்துள்ளேன்.

தற்சமயம் நான் முதலமைச்சர் வேட்பாளராக வருகை தந்துள்ளேன். அதிமுக வெற்றி பெறுவதும் பிஜேபி வெற்றி பெறுவதும் ஒன்றுதான். அதிமுக வெற்றி பெற்றாலும் கூட அங்கே பிஜேபியின் உறுப்பினர்களாக தான் செயல்படுவார்கள். நாடாளுமன்ற தேர்தலில் 38 இடங்களில் நாம் வெற்றி பெற்றுள்ளோம். தேனி தொகுதியில் மட்டும் அதிமுக உறுப்பினர் வெற்றி பெற்றார். ஆனால் அவர் அதிமுகவின் உறுப்பினராக அல்ல பிஜேபியின் உறுப்பினராக செயல்பட்டு வருகிறார். பிஜேபியும் வெற்றி பெறக்கூடாது, அதிமுகவும் வெற்றி பெறக்கூடாது, அதுதான் நமது சபதமாக இருக்க வேண்டும்.
உதவாக்கரையாக செயல்பட்டு வருகிறார் தமிழகத்தின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, நமது உரிமைகள் எல்லாம் ஒவ்வொன்றாக பறிபோய் கொண்டிருக்கிறது. நீட் தேர்வை தடுக்கமுடியவில்லை, சட்டமன்றத்தில் இரண்டு முறை மசோதாக்கள் நிறைவேற்றி டெல்லிக்கு அனுப்பி வைத்தோம். இதுவரை எந்த பலனும் இல்லை. ஜிஎஸ்டி வரியையும், குறைக்கவில்லை. தமிழ்நாட்டிற்கு வந்து சேரவேண்டிய நிதியையும் முறைப்படி பெற முடியவில்லை. தமிழகத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் நரேந்திர மோடி வந்தபொழுது எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். எய்ம்ஸ் மருத்துமனை வரும் என்று 2014ல் அறிவிக்கப்பட்டு 2018 அடிக்கல் நாட்டினார்.

ஆனால் இதுவரை எயம்ஸ் மருத்துவமனை வந்த பாடில்லை. எம்ஸ் மருத்துமனை கிடப்பில் கிடந்தாலும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அதை விரைவு படுத்த முடியும். என்பதை உறுதிபடக் கூறுகிறேன். உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் சென்று நீதிமன்ற வழிகாட்டுதலின்படி அந்த தேர்தல் நடந்து முடிந்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தவுடன் நடத்தாமல் இருக்கும் உள்ளாட்சி தேர்தலை உறுதியாக நடத்துவோம். திருச்சி மாநாட்டில் நான் ஏழு உறுதிமொழிகளை அளித்துள்ளேன்,
பத்தாண்டு தொலைநோக்குத் திட்டம் என்ற தலைப்பில் அறிவித்துள்ளேன்,அறிவிப்போடு மட்டும் நிறுத்தாமல் அதை எப்படி செயல்படுத்தப் போகிறோம் என்ற விளக்கத்தையும் கூறியுள்ளேன்.பொருளாதாரம் வளரும், வாய்ப்பு வளரும், தமிழ்நாடு விவசாயம், நீர்வளம், சுகாதாரம், கல்வி மற்றும் உயர்தர மருந்தகம், சமூக நீதி, நகர்புற வளர்ச்சி ஊரக கட்டமைப்பு உள்ளிட்ட திட்டங்களை அறிவித்து உள்ளோம். இவ்வாறு கூறினார்.
