Asianet News TamilAsianet News Tamil

ஆட்சிக்கு வந்தாலும் சில ஆண்டுகள் மந்தமான ஆளுகைதான்... ஐபேக் வெளியிட்ட அறிக்கை..!

சோர்வடைந்த மற்றும் அரசியல் ரீதியாக குறைகூறப்பட்ட தலைவருடன் பீகார் மாநிலம் இன்னும் சில ஆண்டுகள் மந்தமான ஆளுகையை எதிர்கொள்ளத்தான் வேண்டும்

Even after coming to power, the rule was sluggish for a few years ... IPAC released a statement ..!
Author
Tamil Nadu, First Published Nov 17, 2020, 10:24 PM IST

சமீபத்தில் நடைபெற்ற பீகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது. அக்கூட்டனியில் இருந்த நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் 43 இடங்களிலும், பாஜக 74 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.Even after coming to power, the rule was sluggish for a few years ... IPAC released a statement ..!

நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். பாஜகவை சேர்ந்த இருவர் துணை முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டனர். இருப்பினும், பிகாரில் நிதிஷ்குமார் கட்சியுடன் கூட்டணி வைத்திருந்த பாஜக இன்று அவரது ஐக்கிய ஜனதாதளம் கட்சியை விட அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று அக்கட்சியுடன் உறவாடி அழித்து விட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதனை சுட்டிக் காட்டி பாஜகவால் நியமிக்கப்பட்ட முதல்வர் நிதிஷ் குமாருக்கு வாழ்த்துகள் என்று தேர்தல் உத்தியாளரான பிரஷாந்த் கிஷோர் கிண்டலடித்து உள்ளார்.Even after coming to power, the rule was sluggish for a few years ... IPAC released a statement ..!

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “சோர்வடைந்த மற்றும் அரசியல் ரீதியாக குறைகூறப்பட்ட தலைவருடன் பீகார் மாநிலம் இன்னும் சில ஆண்டுகள் மந்தமான ஆளுகையை எதிர்கொள்ளத்தான் வேண்டும்” என்று பிரஷாந்த் கிஷோர் பதிவிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios