Asianet News TamilAsianet News Tamil

குற்றாலத்தில் இசக்கி சுப்பையா ஆலோசனை..! அமமுகவை இரண்டாக உடைக்க தீவிரம்..!

தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை இரண்டாக உடைத்து அதிமுகவில் இணையப் தென்சென்னையில் அக்கட்சி சார்பில் போட்டியிட்ட இசக்கி சுப்பையா தீவிர முயற்சியில் ஈடுபட்டார்.

Esakki subbaiah Consulting...
Author
Tamil Nadu, First Published Jun 5, 2019, 10:28 AM IST

தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை இரண்டாக உடைத்து அதிமுகவில் இணையப் தென்சென்னையில் அக்கட்சி சார்பில் போட்டியிட்ட இசக்கி சுப்பையா தீவிர முயற்சியில் ஈடுபட்டார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியின் மிக முக்கியமான நிர்வாகிகளில் ஒருவராக செயல்பட்டு வருபவர் இசக்கி சுப்பையா. இவர் தினகரனின் நம்பிக்கைக்குரியவர்களில் மிக முக்கியமானவர். கட்சியின் நிதி ஆதாரங்களில் இசக்கி சுப்பையாவும் ஒருவர். கணக்குப் பார்க்காமல் தினகரனுக்கு பணத்தை அள்ளி வீசுபவர் இவர். சென்னையில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சி அலுவலகம் கூட இசக்கி சுப்பையாவிற்கு சொந்தமான இடத்தில் தான் இயங்கி வருகிறது. தென் சென்னை தொகுதியில் இவருக்குத்தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிட தினகரன் வாய்ப்பு அளித்தார். பணத்தை வாரி இறைக்கும் இசக்கி சுப்பையா வாக்குகளை கணிசமான அளவில் கூட பெற முடியவில்லை.

 Esakki subbaiah Consulting...

இந்த நிலையில் தேர்தல் முடிவுக்குப் பிறகு தினகரனுடன் இசக்கி சுப்பையாவிற்கு கருத்துவேறுபாடு ஏற்பட்டதாக கூறுகிறார்கள். தேர்தல் தோல்வியை தொடர்ந்து தினகரனை சந்தித்துப் பேசிய இசக்கி சுப்பையாவிடம் தினகரன் கூறிய சில வார்த்தைகள் அவளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய தாகச் சொல்கிறார்கள். மேலும் தேர்தல் தோல்விக்கு வேட்பாளர்கள் தான் காரணம் என்கிற ரீதியில் தினகரன் பேசியதே இசக்கி சுப்பையா அவை மேலும் டென்சன் ஆக்கி உள்ளது. Esakki subbaiah Consulting...

இந்த நிலையில் அதிமுகவில் இணையுமாறு இசக்கி சுப்பையாவிற்க அழைப்பு வந்ததாக சொல்கிறார்கள். சாதாரணமாக வந்து சேர்ந்தால் பெரிய அளவில் பொறுப்புகளும் பதவிகளும் கிடைக்காது என்பதால் தினகரன் தரப்பில் இருந்து ஒரு பட்டாளத்தையே அழைத்து வரும் அசைன்மென்ட்டை இசக்கி சுப்பையாவிற்க ஆளும் தரப்பு கொடுத்துள்ளதாக சொல்கிறார்கள். Esakki subbaiah Consulting...

இதனால் தனது பரிந்துரையை மூலம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் நிர்வாகிகளான அனைவரையும் குற்றாலத்திற்கு தனது சொந்த செலவில் அழைத்துச் சென்றுள்ளார் இசக்கி சுப்பையா. அங்கு தனக்கு சொந்தமாக உள்ள விடுதியில் வைத்து அவர்களிடம் நேற்று முழுவதும் ஆலோசனை நடத்தியுள்ளார். தினகரன் உடன் இருக்கும் பட்சத்தில் அரசியல் எதிர்காலம் இல்லை என்றே இசக்கி சுப்பையா விடம் அங்கிருந்த பலரும் கூறியுள்ளனர்.

 Esakki subbaiah Consulting...

எனவே வேறு கட்சிக்கு அதிலும் அதிமுகவிற்கு செல்வது உகந்தது என்றும் இசக்கி சுப்பையாவிடம் நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். இதனையடுத்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில அளவில் நிர்வாகிகளாக இருப்பவர்கள் முதல் கிளை கழக நிர்வாகிகள் வரை ஒரு குரூப்பை அப்படியே அதிமுகவிற்கு அழைத்துச் செல்ல இசக்கி சுப்பையா முடிவெடுத்து விட்டதாக சொல்கிறார்கள். Esakki subbaiah Consulting...

இது கிட்டத்தட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை உடைப்பதற்கு சமம் என்றும் பேசிக் கொள்கிறார்கள். இது குறித்து தினகரன் தரப்பில் விசாரித்தபோது இசக்கி சுப்பையா தினகரனிடம் தெரிவித்துவிட்டதால் குற்றாலத்தில் ஆலோசனை நடத்தியதாகவும் அவர் அதிருப்தியில் இருக்கும் தங்கள் நிர்வாகிகளை சமாதானம் செய்வதாகவும் அவர் கட்சியை உடைக்க போவதாக வெளியான தகவல் உண்மையில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios