டி.டி.வி.தினகரனுடன் அதிமுக அமைச்சர்கள் சிலர் ரகசிய தொடர்பில் இருப்பதாக உளவுத்துறை கொடுத்த தகவலால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சியடைந்துள்ளார்.

இந்தத் தேர்தல் எடப்பாடி பழனிசாமிக்கு முக்கியமானது. ஆகையால், அரசியல் நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறார். களம் குறித்து உளவுத்துறை அதிகாரிகளிடம் அடிக்கடி தகவல்களை கேட்டு வருகிறார். ஸ்டாலின் பிரச்சாரம், திமுகவுன் தேர்தல் பணிகள் என ஓவ்வொன்றையும் கேட்டு தெரிந்து கொள்கிறார். 

எதிர்கட்சிகளை மட்டுமல்லாது அதிமுகவில் உள்ள ஒவ்வொரு அமைச்சரின் தேர்தல் பணிகள் குறித்தும் ரகசியமாக நோட்டம் விடக் கூறியிருக்கிறார். அப்போது டெல்டா பகுதியைச் சேர்ந்த சில அமைச்சர்கள் தினகரன் தரப்போடு இரகசியமாக டீலிங்கில் இருப்பதையும் உளவுத்துறை அதிகாரிகள் விளக்கி உள்ளனர். சில அமைச்சர்களோ தேர்தல் நிதியை முழுமையாக கட்சியினருக்கு கொடுக்காமல் பதுக்கி வைத்துள்ளதையும் கூறியிருக்கின்றனர்.
 
இதனால் அதிர்ச்சியடைந்த எடப்பாடி பழனிசாமி விரைவில் முக்கிய அமைச்சர்களை அழைத்து ஆலோசனை நடத்தி இதனை வெளிப்படையாக சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடம் கேட்க முடிவெடுத்துள்ளார். அப்போது தனக்கு எதிராக செயல்படுபவர்களை பற்றிய ஆதங்கத்தையும் கொட்டித் தீர்க்க உள்ளார்.