Asianet News TamilAsianet News Tamil

" Enjoy Rape" : "பாலியல் வன்கொடுமையை சுகமாக அனுபவிக்க வேண்டும்" காங் எம்எல்ஏ வக்கிர பேச்சு,

ஒரு பெண் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகும் போது அதை தடுக்க முடியாவிட்டால் அதை மகிழ்ச்சியுடன் அனுபவித்து கொள்ள வேண்டும் என சட்டமன்றத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ கருத்து கூறியிருப்பது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 

Enjoy Rape "if cant block Sexual abuse must be enjoyed comfortably" Kang MLA perverse speech,
Author
Chennai, First Published Dec 17, 2021, 11:49 AM IST

ஒரு பெண் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகும் போது அதை தடுக்க முடியாவிட்டால் அதை மகிழ்ச்சியுடன் அனுபவித்து கொள்ள வேண்டும் என சட்டமன்றத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ கருத்து கூறியிருப்பது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அவர் கூறிய கருத்தை சபாநாயகரும் சிரித்துக்கொண்டே உங்களது அனுபவத்தை வரவேற்கிறேன் என பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக சட்டமன்றத்தில் மாண்பு மிகு மக்கள் பிரதிநிதிகள் பாலியல் விவகாரத்தை சுவாரசியமாக மாறி மாறி பேசி மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டுள்ள நிகழ்வை பலரும் கண்டித்து வருகின்றனர்.

பெண்களுக்கு எதிராக வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது பெண்களை காதலிப்பது போல் நடித்து கற்பழித்து ஏமாற்றுவது. காதலிக்க மறுக்கும் பெண்களின் முகத்தில் ஆசிட் வீசுவது, திருமணம் என்ற போர்வையில் பெண்களிடம் வரதட்சனை கேட்டு துன்புறுத்துவது என பல வகைகளில் பெண்கள் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர். இதை தடுக்க அரசுகள் எத்தனையோ நடவடிக்கைகள் எடுத்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. இப்படிபட்ட ஒரு அவள நிலையில் நாடு பயணித்துக் கொண்டிருக்கும் சூழலில் பெண்களின் பாதுகாப்புக்காக சட்டம் இயற்ற வேண்டிய மாண்பு பொருந்திய சட்டமன்றத்தில்  பெண்களுக்கு எதிரான பாலியல் வன்புணர்வை சபாநாயகரும், சட்டமன்ற உறுப்பினரும் சுவாரஸ்யத்துடன் பேசி நகைத்திருப்பது விவாதப் பொருளாக மாறியுள்ளது. 

Enjoy Rape "if cant block Sexual abuse must be enjoyed comfortably" Kang MLA perverse speech,

நாட்டிலேயே சர்ச்சைகளுக்கு கொஞ்சமும் பஞ்சம் இல்லாத சட்டமன்றம் எதுவென்றால் கர்நாடக சட்டமன்றம்  என்று உடனே சொல்லும் அளவிற்கு பல சர்ச்சைகளுக்கு சொந்தமான சட்டமன்றமாக இது இருந்து வருகிறது. சட்டமன்றத்திற்குள் ஆபாச வீடியோ பார்த்தது, மற்றொரு சட்டமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தியின் புகைப்படத்தை ஜூம் செய்து பார்த்தது, மேலும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் ஆன்லைனில் கேம் விளையாடிக் கொண்டிருந்தது என பஞ்சாயத்துகளுக்கு பஞ்சமில்லாத சட்டமன்றமாக  கர்நாடக சட்டமன்றம் இருந்து வந்துள்ளது. இதனையடுத்து சட்டமன்றத்திற்குள் செல்போன் கொண்டு செல்லவே அங்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.  அதேபோல சட்டமன்றத்தில் ஆபாச வார்த்தைகளுக்கும் பஞ்சமில்லாத சட்டமன்றமாக கர்நாடக சட்டமன்றம் இருத்து வருகிறது.  இந்நிலையில்தான் காங்கிரஸ் எம்எல்ஏவும், முன்னாள் சபாநாயகருமான ரமேஷ் குமார் சட்டமன்றத்தில் பெண்கள் கற்பழிக்கப் படுவதை மிக ஆபாசமாக மேற்கோள்காட்டி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திள்ளது.

கர்நாடக மாநில சட்டமன்ற கூட்டத்தில் வேளாண்மை பயிர் பாதுகாப்பு மற்றும் இழப்பீடு குறித்த விவாதம் நேற்று நடைபெற்றது. பாரதிய ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் உறுப்பினர்கள் கடுமையான விமர்சனங்களையும் கோரிக்கைகளை முன்வைத்தனர். அப்போது அது குறித்து விவாதிக்க கேள்வி நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதையடுத்து காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் சபாநாயகருமான ரமேஷ்குமார் பேசுகையில், பலாத்காரம் தவிர்க்க முடியாததாக இருக்கும்போது, படுத்து அதை அனுபவித்துக்கொள்ளுங்கள் என்று ஒரு பழமொழி உண்டு, நீங்கள் இருக்கும் நிலையும் அதுதான் என்று சபாநாயகரிடம் கூறினார். அவரின் இந்த கருத்து பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது. அப்போது சபாநாயகரும் சிரித்துக்கொண்டே உங்கள் அனுபவத்தை வரவேற்கிறேன் என்று கூறினார். எம்எல்ஏ ஆபாசமாக பேசியதை சபாநாயகரும் வரவேற்று ஆமாம் அந்த நிலையில்தான் நானும் இருக்கிறேன் என்று பேசியது நாடு முழுவதும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

Enjoy Rape "if cant block Sexual abuse must be enjoyed comfortably" Kang MLA perverse speech,

பல்வேறு அரசியல் கட்சிகளும் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தான் கூறிய கருத்து சர்ச்சையே ஏற்படுத்தியுள்ள நிலையில்,  ரமேஷ்குமார் மன்னிப்பு கோரியுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர், கற்பழிப்பு பற்றி இன்றைய சட்டசபையில் நான் கூறிய அலட்சியமிக்க மற்றும் அலட்சியமான கருத்துக்காக  அனைவரிடமும் நான் மனமார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எனது நோக்கம் கொடூரமான குற்றத்தை சிறுமைப் படுத்துவது அல்ல. அல்லது அதை வெளிச்சம் போடுவதற்காகவும் அல்ல. அதை ஒரு குறிப்புக்காக தெரிவித்தேன் அவ்வளவுதான். இனி நான் மிக கவனமாக வார்த்தைகளை கையாளுவேன். என அவர் கூறியுள்ளார்.  

Follow Us:
Download App:
  • android
  • ios