Electricity has been stopped in some places for peoples safety

மக்களின் பாதுகாப்பு கருதியே சில இடங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது எனவும் அதை யாரும் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம் எனவும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருவதால் சென்னையில் பெரும்பாலான இடங்கள் தண்ணீரில் மிதக்கிறது. 

மேலும் ஆங்காங்கே தேங்கி நிற்கும் கழிவு நீரை சுத்தப்படுத்தும் முயற்சியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், மின் கட்டண வசூல் மையங்களில் ஸ்வைப்பிங் மிஷின் மூலம் மின் கட்டணம் செலுத்தும் சேவையை மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகம் முழுவதும் 3,000 மின்வாரிய அலுவலகத்தில் ஸ்வைப்பிங் மிஷின் திட்டம் துவக்கப்படும் எனவும் மழைக் காலம் துவங்கும் முன்பே மண்டல வாரியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தோம் எனவும் தெரிவித்தார். 

சென்னையில் மின் வயர்கள் மேலே செல்வதால், பாதுகாப்பு கருதி மழை நேரத்தில் மட்டும் மின் விநியோகத்தை நிறுத்தி வைத்துள்ளதாகவும் அதை யாரும் தவறாக புரிந்து கொள்ளக்கூடாது எனவும் தங்கமணி கேட்டுக்கொண்டார்.