Asianet News TamilAsianet News Tamil

அ.தி.மு.க. பிடிக்கப்போவது எத்தனை..? தி.மு.க.வுக்கு கிடைக்கப்போவது இத்தனை.. தமிழக அரசியல் தலைவர்களை அல்லு தெறிக்கவிடும் கி(ல்)லி சர்வே..!

தமிழகத்தில் தேர்தல் வைபரேஷன் இன்னமும் தணிந்தபாடில்லை. பரப்புரை பீக்கில் இருக்கும்போதுதான் அந்த சர்வே, இந்த சர்வே...தி.மு.க.வுக்கு அத்தனை இடம் கிடைக்க வாய்ப்பு, அ.தி.மு.க. இத்தனை இடம் அள்ள வாய்ப்பு! என்று சர்வேவாக போட்டு சாத்தியெடுத்து சாகடிப்பார்கள் என்றால் தேர்தல் முடிந்த பின்னும் அதே பட்டாசை மீண்டும் மீண்டும் கொளுத்திவிட்டு தலைவர்களை தாறுமாறாக தெறிக்க விடுகிறார்கள். 

election Survey
Author
Tamil Nadu, First Published Apr 19, 2019, 6:08 PM IST

தமிழகத்தில் தேர்தல் வைபரேஷன் இன்னமும் தணிந்தபாடில்லை. பரப்புரை பீக்கில் இருக்கும்போதுதான் அந்த சர்வே, இந்த சர்வே...தி.மு.க.வுக்கு அத்தனை இடம் கிடைக்க வாய்ப்பு, அ.தி.மு.க. இத்தனை இடம் அள்ள வாய்ப்பு! என்று சர்வேவாக போட்டு சாத்தியெடுத்து சாகடிப்பார்கள் என்றால் தேர்தல் முடிந்த பின்னும் அதே பட்டாசை மீண்டும் மீண்டும் கொளுத்திவிட்டு தலைவர்களை தாறுமாறாக தெறிக்க விடுகிறார்கள். 

வாட்ஸ் அப்பில் ’எக்ஸிட் போல்’ போன்றதொரு கருத்துக் கணிப்பு செம்ம வைரலாகிக் கொண்டிருக்கிறது நேற்றில் இருந்து. எடப்பாடியாரை எக்கச்சக்க குஷியாகவும், எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினை கன்னாபின்னாவென வருத்தப்படவும் வைக்கும் வகையிலான ரிப்போர்ட் அந்த சர்வே ரிசல்ட்டில் இருக்கிறது. 

 election Survey

அதன் விபரம் இதுதான்... புதுச்சேரியை சேர்க்காமல், தமிழகத்தின் 39 நாடாளுமன்ற தொகுதிகளில் அ.தி.மு.க.வுக்கு 22 இடங்களும், தி.மு.க.வுக்கு 17 இடங்களும் கிடைக்குமென்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிகளில் அ.தி.மு.க. 11 இடங்களிலும், தி.மு.க. 7 இடங்களிலும் வெற்றி பெறும் என்று குறிப்பிட்டுள்ளது. இந்த ரிப்போர்ட்டைப் பார்த்து அ.தி.மு.க. தரப்பு ஏக குஷிதான். காரணம், பி.ஜே.பி.யுடன் கூட்டணி வைத்ததால் தமிழகத்தில் சிங்கிள் டிஜிட்டில்தான் இந்த அணியே வெல்லும் எனக் கூறப்பட்ட நிலையில் இருபதுக்கும் மேற்பட்ட இடங்களை வெல்வதென்பது ஏக குஷிதானே. election Survey

அதேபோல் சட்டசபை இடைத்தேர்தல் நடந்திருக்கும் பதினெட்டில் பெரும்பாலானவற்றை கைப்பற்றி, இந்த ஆட்சியையே கவிழ்த்திட ஸ்டாலின் திட்டமிட்டிருந்தார். ஆனால் இந்த சர்வே ரிப்போர்ட்டின் படி 11 தொகுதிகளைப் பிடிக்கும் அ.தி.மு.க. என்றும், அடுத்த மாதம் நடக்க இருக்கும் 4 தொகுதி இடைத்தேர்தல்களில் குறைந்தது இரண்டையாவது அக்கட்சி பிடித்துவிடும் எனும் ரீதியிலும் இந்த சர்வேயில் தகவல்கள் இருக்கின்றன. election Survey

அதன்படி பார்த்தால் ஆளும் அ.தி.மு.க.வின் ஆட்சிக்கு எந்த ஆபத்தும் வரவாய்ப்பில்லை. அதனால்தான் ஸ்டாலின் ஏக வருத்தத்தில் இருக்கிறார். ஆனால் தி.மு.க.வின் முக்கிய தலைவர்களோ ‘இது எவனோ வாட்ஸ் அப்ல கிளப்பியிருக்கிற வதந்தி தளபதி. நீங்க தைரியமா இருங்க. ஜூனில் நம்ம ஆட்சி தமிழகத்தில் அமையுது.” என்கிறார்கள். கவனிப்போம்.

Follow Us:
Download App:
  • android
  • ios