முதலமைச்சர் எடபாடி பழனிசாமி இன்று காலை தனது சொந்த ஊரான எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட சிலுவம்பாளையம் கிராமத்தில் வாக்களித்துவிட்டு சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தன் வீட்டுக்கு வந்துவிட்டார். அங்கே இருந்தபடி அமைச்சர்களைத் தொடர்பு கொண்டு பகல் முழுவதம் விசாரித்துக் கொண்ட இருந்துள்ளார்.

மக்களவைத் தேர்தலை வி ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளும் வகையில் உள்ள 18 சட்டமன்ற இடைத் தேர்தலகள் குறித்துதான் அதிக அளவு அவர் விசாரித்திருக்கிறார்.

எடப்பாடிக்கு பதில் சொன்ன அமைச்சர்கள், ‘நாம நல்லா வேலை செஞ்சிருக்கோம். நாம கவனிச்ச ஏரியாக்களில் அதிக வாக்குகள் பதிவாகியிருக்கு. சட்டமன்ற இடைத்தேர்தல்ல என்னிக்குண்ணே ஆளுங்கட்சி தோத்திருக்கு? கவலைப்படாம இருங்கண்ணே... 12 சீட் நமக்குதான் ’ என்று சொல்லியிருக்கிறார்கள். 

மக்களவைத் தேர்தலும் பாசிடிவ்வாக இருப்பதாக சொல்லியிருக்கிறார்கள் முதல்வரிடம் பேசிய அமைச்சர்கள். இதனால் குஷியாகிவிட்டாராம் எடப்பாடி.
தேர்தல் களத்தில் மத்திய உளவுத்துறையும், மாநில உளவுத்துறையும் ஆய்வு நடத்தியிருக்கிறார்கள். மத்திய உளவுத்துறையிடம் கலந்துகொண்டு இன்று மதியம் 2 மணி வாக்கில் மாநில உளவுத்துறை முதல்வருக்கு முதல் கட்ட ரிப்போர்ட் அனுப்பியிருக்கிறது. 

திமுக பல இடங்களில் பணம் கொடுக்கவில்லை. அதேநேரம் அதிமுக பணம் கொடுத்ததோடு கடுமையாகவும் உழைத்திருக்கிறது. எனவே வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கிறது’ என்று அந்த ரிப்போர்ட்டில் சொல்லப்பட்டிருக்கிறது. 

இதுதொடர்பாக உளவுத்துறை அதிகாரிகளிடமும் எடப்பாடி பழனிசாமி போனில் பேசியிருக்கிறார். ‘அரக்கோணத்தில் பாமக வெற்றி கடினம் என்கிறீர்கள். ஆனா இடைத்தேர்தல் நடக்கும் சோளிங்கரில் நாம் ஜெயிப்போம் என்கிறீர்கள். குழப்பா இருக்கே?’ என்று கேட்டிருக்கிறார். 

அதற்கு அவர்கள், ‘பாமகவுக்கு எம்.பி. தேர்தலில் தலித்துகள் வாக்களிக்கவில்லை. சோளிங்கரில் இரட்டை இலை என்பதால் வாக்களித்திருக்கிறார்கள்’ என்று பதில் அளித்திருக்கிறார்கள்.

அதன் பின் தன்னை சந்திக்க வந்த அதிமுக நிர்வாகிகளிடம் பேசிய எடப்பாடி, ‘எப்படியாவது 20 எம்பி சீட்டாவது ஜெயிப்போம். அசெம்பிளி தேர்தல்ல ஆட்சிக்கு ஆபத்து வராது’ என்று அழுத்தம் திருத்தமாக சொல்லியிருக்கிறார்.