சுட சுட தேர்தல் செய்திகள்..! 8 முக்கிய பிட்டு செய்திகள் இதோ..! 

1.தமிழகத்தில் வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க சென்ற 5 முதியவர்கள் வெவ்வேறு பகுதிகளில் மயங்கி விழுந்து உயிரிழப்பு

2.இயந்திர கோளாறு காரணமாக தமிழகத்தில் 384 வாக்குப்பதிவு இயந்திரங்களும் , 692 ஒப்புகை சீட்டு இயந்திரங்களும் மாற்றப்பட்டுள்ளன என தமிழக  தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்து உள்ளார் 

3.பண்ருட்டி அருகே திருவதிகையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. இயந்திரத்தில் உள்ள பட்டன் இல்லாததால் வாக்குப்பதிவு நிறுத்தம் 

4.மதுரை  கீரைத்துறை சிந்தாமணி சாலையில் திமுக பகுதி செயலாளர் எம்எஸ்.பாண்டியனை மர்ம கும்பல்  சரமாரியாக வெட்டி படுகொலை

5.புதுச்சேரி மக்களவை, தட்டாஞ்சாவடி இடைத் தேர்தலில் தற்போதைய நிலவரப்படி 50 சதவிகிதம் வாக்குப்பதிவு. தமிழகத்தில் அதிகபட்சமாக நாமக்கல்லில் 41.5 6% வாக்குகள் பதிவாகியுள்ளன

6.கர்நாடக முதல்வர் குமாரசாமியின் ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை

7.வெங்கட்டா நகர் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இரவு 7 மணி வரை நீட்டிப்பு , வாக்குப்பதிவு இடையில் நிறுத்தப்பட்டதால் நேரம் நீட்டிப்பு.

8.வேலூர்  மாவட்டம் குடியாத்தம் அடுத்த கல்லூர் ஊராட்சியில் திமுக &  பாமகவினர் இடையே மோதல்.