பொதுவாக தேர்தல் நேரத்தின்போது கட்சிகள் தேர்தல் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அதில் மக்களுக்கு தங்கள் கட்சி ஜெயித்தால் இதை, இதை செய்வோம் என்று வாக்குறுதி அளிப்பார்கள். ஆனால் அந்த கட்சிகள் ஜெயித்து வந்து விட்டால் தாங்கள் அளித்த வாக்குறுதிகளையே மறந்து விடுவார்கள். அதுவும் சில  கட்சிகள் நிறைவேற்றவே முடியாத பல வாக்குறுதிகளை அள்ளி வீசுவார்கள்.

இதனைக் கிண்டல் செய்யும் விதமாக கலகலப்பு என்ற திரைப்படத்தில் தேர்தலில் நிற்கும் மனோ பாலா, பெண்களைக் கவரும் விதமாக தனது தோட்டத்தில் உள்ள பைப்பில் இலவசமான பால் பிடித்துச் செல்லலாம் என கூறி அசர வைத்து விடுவார்.

இதனை முறியக்கும் விதமாக சந்தானம், ஆண்களைக் கவரும் வகையில் தனது  தோட்டத்தில்  உள்ள பைப்பில் சாராயம் பிடித்துக் கெள்ளலாம் என கூறுவார். நகைச்சுவைக்காக திரைப்படங்களில் இப்படி  காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும்.

இந்நிலையில் திருப்பூர்: ஈரோடு மாவட்டம் அந்தியூரை சேர்ந்தவர் சேக் தாவூத் என்ற டெய்லர்  திருப்பூர் தொகுதியில் வேட்பளராக களம் இறங்குகிறார். . இவர் நேற்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து திருப்பூர் மக்களவை தேர்தலில் போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்தார்.
 
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  நான் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தேன். நான் 15 தேர்தல் வாக்குறுதிகள் வைத்துள்ளேன். 

முதலில் எனது தொகுதியில் இருக்கும் அனைத்து பெண்களுக்கும் ரூ.25 ஆயிரம் உதவி தொகையை அரசிடமிருந்து பெற்றுத்தருவேன். பின்னர் ஒவ்வொரு குடும்பத்திலுள்ள நபர் ஒன்றுக்கு மாதம் 10 லிட்டர் பிராந்தி சுத்தமானதாக பாண்டிச்சேரியிலிருந்து பெற்றுத்தருவேன். 

அனைத்து மத பெண்களுக்கும் திருமணத்திற்கு 10 பவுன் நகை, 10 லட்சம் பணம் பெற்றுத் தருவேன். மேலும் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த கூடாது என டெல்லியில் தொடர்ந்து போராடுவேன் என வாக்குறுதிகளை அள்ளிவீசி அனைவரையும் கிறுகிறுக்க வைத்தார்.