உள்ளாட்சி தேர்தலை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இந்த வழக்கை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்யும் என தெரிகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

உள்ளாட்சி தேர்தலில் பழங்குடியினருக்கு உரிய இட ஒதுக்கீடு கொடுக்கப்படாமல் தேர்தலை அறிவித்துள்ளனர் இதனால் உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கில் தனி நீதிபதி கிருபாகரன் தேர்தலை ரத்து செய்து , தேர்தல்க் தொடர்பான மூன்று அரசாணைகளை ரத்து செய்து உத்தரவிட்டார்.

மேலும் மேற்கண்ட முறைகளை கலைந்து டிச 30க்குள் தேர்தலை நடத்த உத்தரவிட்டார். தனி நீதிபதி உத்தரவு எனபதாலும் ரூ.106 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாலும் இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக தேர்தல் ஆணையம் மேல் முறையீடு செய்துள்ளதுள்ளது.

அக்டோபர் 30 க்குள் உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படாவிட்டால் சட்ட சிக்கல் ஏற்படும் என்பதால் இந்த பிரச்சனைஅயை மையமாக வைத்து தமிழக அரசு மேல் முறையீடு செய்யும் . அவ்வாறு மேற்கண்ட அம்சங்கள் ஏற்று கொள்ளப்படும் பட்சத்தில் தனி நீதிபதி உத்தரவுக்கு தடை வாங்க வாய்ப்பு உள்ளதாக சட்ட வல்லுனர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இன்று தேர்தல் ஆணையம் சார்பில் மேல்முறையீட்டு மனு செய்யப்பட்டது. தேர்தல் ஆணையம் சார்பில் வழக்கறிஞர் பி.குமார் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு இன்னும் எடுத்துகொள்ளப்படவில்லை. அவ்வாறு எடுத்துகொள்ளும் பட்சத்தில் நாளை காலை இரண்டாவது அமர்வு நீதிபதிகள் குலுவாடியா ரமேஷ் , வைத்தியநாதன் அமர்வு முன்பு விசாரணைக்கும் வரும் என தெரிகிறது.