இது குறித்து அவர், 1ம் கட்ட தேர்தல் டிசம்பர் 27ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் டிசம்பர் 30 தேதியும் நடைபெறும்.  வேட்பு மனு தாக்கல் தொடங்கும் நாள்: டிசம்பர் 6. வேட்பு மனு தாக்கல் கடைசி நாள் டிசம்பர் 13. திரும்ப பெற கடைசி நாள், டிசம்பர் 18ம் தேதியும் நடைபெற உள்ளது.  ஜனவரி 2, 2020 தேர்தல் எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த தேர்தல் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் நடைபெறும். கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்டக்குழு உறுப்பினர்களுக்கு இந்தத் தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளார்.

ஆனால் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். கிராம உள்ளாட்சி தேர்தல் வழக்கம்போல் வாக்குச்சீட்டு முறையில் நடத்தப்படும். தமிழக உள்ளாட்சி தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது.

 

மேயர், நகர்மன்ற, பேரூராட்சி தலைவர், மாவட்ட, ஒன்றிய குழு தலைவருக்கான மறைமுக தேர்தல் ஜனவரி 11 அன்று நடைபெறும். கிராம ஊராட்சிகளில் உள்ளாட்சித் தேர்தலுக்கு நான்கு வண்ணங்களில் வாக்குச் சீட்டு பயன்படுத்தப்படும்.