election commission

நாட்டில் இனி நடத்தப்படும் தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு பதிலாக, பழைய முறையான காகித அடிப்படையிலான வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று கோரி தலைமை தேர்தல் ஆணையத்திடம் 16 எதிர்க்கட்சிகள் சார்பில் நேற்று மனு அளிக்கப்பட்டுள்ளது.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பாதுகாப்பு இல்லை, அதில் தில்லு முல்லு நடக்கிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தநிலையில், நேற்று மனு அளித்துள்ளன. 

மாயாவதி, கெஜ்ரிவால்

சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பஞ்சாப் தவிர மற்ற 4 மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்றது. உத்தரப்பிரதேசத்தில் படுதோல்வியைச் சந்தித்த பகுஜன் சமாஜ் கட்சிதலைவர்மாயாவதி, மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பாரதிய ஜனதா கட்சி தில்லுமுல்லு செய்துள்ளது என்று முதன்முதலில் பிரச்சினையை கிளப்பினார். அதைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலும், இதே குற்றச்சாட்டை முன்வைத்தார். 

தனிக்கை முறை

இதற்கிடையே, தேர்தலில் மின்னணு எந்திரத்தில் வாக்களித்து விட்டு வரும் வாக்களர்களுக்கு தாங்கள் யாருக்கும் வாக்களித்து இருக்கிறோம் என்பதை தனிக்கை காகிதம் மூலம் சரிபார்க்கும் முறையை அடுத்து வரும் தேர்தலில் கொண்டு வரவேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் கூறிவந்தனர்.

ஆலோசனை

இந்நிலையில் இது தொடர்பாக டெல்லியில் 16 எதிர்க்கட்சிகள் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. அதில் தேர்தல் ஆணையத்திடம் சென்று மீண்டும் காகித வாக்குச்சீட்டு முறையை கொண்டு வர வேண்டும் என்று மனு அளிக்க முடிவு செய்யப்பட்டது.

எதிர்க்கட்சிகள்

அதன்படி, காங்கிரஸ் சார்பில் குலாம் நபி ஆசாத், அகமது படேல், ஆனந்த் சர்மா,கபில் சிபல், ஐக்கிய ஜனதாதளம் கட்சி சார்பில் அணில் அன்வர் அன்சாரி,திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் சுகேந்து சேகர் ராய், பகுஜன் சமாஜ் கட்சியின்சதீஸ் மிஸ்ரா, சமாஜ்வாதி கட்சி சார்பில் நீரஜ் சேகர், தேசிய வாத காங்கிரஸ் சார்பில் மஜீத் மேமம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ேதசியச் செயலாளர் டிராஜா, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் ஜே.பி. நரேன் யாதவ் , தி.மு.க. சார்பில் திருச்சி சிவா உள்ளிட்ட கட்சியினர் தேர்தல் ஆணையம் அலுவலகத்துக்கு நேரில் மாலை சென்று மனு அளித்தனர்.

அனைத்துக் கட்சி கூட்டம்

காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் கூறுகையில், “ 16 எதிர்க்கட்சிகள் இணைந்து தேர்தல் ஆணையத்திடம், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பி இருக்கிறோம். மீண்டும் வாக்குச்சீட்டு முறை கொண்டு வர கோரி இருக்கிறோம். இது தொடர்பாக விரைவில் அனைத்துக் கட்சிக் கூட்டத்ைததேர்தல் ஆணையம் கூட்டி ஆலோசிக்கும்’’ என்றார்.