#BREAKING எந்த சின்னத்தில் போட்டியிடுகிறது பாமக?... தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு...!
சொந்த சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் பாமக மாம்பழம் சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்திருந்தது.
சட்டப்பேரவை தேர்தலில் பாமகவிற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரி சட்டமன்றத்திற்கு ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமகவிற்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் பாட்டாளி மக்கள் கட்சி நேற்று தங்களுடைய தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டது.
இலவச கல்வி, 9ம் வகுப்பு மாணவர்களுக்கு லேப்டாப் என பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகள் அதில் இடம் பெற்றிருந்தன. ஏற்கனவே பாமகவின் 40 ஆண்டுகால கோரிக்கையான வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டிற்கு தற்காலிக மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதால், பாமகவின் வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது.
சொந்த சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் பாமக மாம்பழம் சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்திருந்தது. இன்று தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் வெளியிட பாமகவிற்கு மாம்பழம் சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளது. பாமக பதிவு செய்யப்பட்ட கட்சி என்பதால் இந்த சின்னம் தங்களுக்கு வேண்டுமென பாமக விண்ணப்பித்திருந்த நிலையில், அக்கட்சியின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.