நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைத்துள்ளோம் என்பது பற்றி பாமக நிறுவனர் ராமதாஸ் பரபரப்பாக கருத்து தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் பாமக யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அதிமுகவுடன் கூட்டணி அமையும் என்று தகவல்கள் வெளியாகிவருகின்றன. இந்நிலையில் ஒவ்வோர் ஆண்டும் நிழல் பட்ஜெட் வெளியிடுவது பாமகவின் வழக்கம். இந்த ஆண்டுக்கான நிழல் பட்ஜெட் சென்னையில் வெளியிடப்பட்டது. நிழல் பட்ஜெட்டை வெளியிட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், கூட்டணி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

 

“நாடாளுமன்றத் தேர்தலுக்கு இரண்டு கட்சிகளுடன் கூட்டணி அமைத்துவிட்டோம். ஒன்று ஆம் ஆத்மி, மற்றொன்று மதச்சார்பற்ற ஜனதா தளம். இந்த இரு கட்சிகளுடனும் கூட்டணி குறித்து பேசி முடித்து விட்டோம்” என்று தெரிவித்திருக்கிறார்.  மேலும் அவர் கூறும்போது, “என்னிடம் பத்திரிகையாளர்கள் எதிர்பார்த்தது கிடைக்காமல், சப்பென்றாகி விட்டதா?” என்றும் செய்தியாளர்களிடம் ராமதாஸ் கேள்வி எழுப்பினார். 

நாடாளுமன்றத் தேர்தலில் பாமக யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற பட்டிமன்றம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் கூட்டணி தொடர்பாக ராமதாஸ் கருத்து தெரிவிப்பார் என்று ஏராளமான செய்தியாளர்கள் நிழல் பட்ஜெட் வெளியிடும் நிகழ்வுக்கு வந்திருந்தார்கள். ஆனால், செய்தியாளர்களை ஏமாற்றத்துக்குள்ளாக்கும் வகையில், கிண்டலாகக் கருத்து கூறி கூட்டணி தொடர்பான கேள்விகளுக்கு ராமதாஸ் முற்றுபுள்ளி வைத்தார்.