தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பணப்பட்டுவாடா உள்ளிட்ட புகார் காரணமாக தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளுக்கான தேர்தலை ரத்து செய்தது தேர்தல் ஆணையம். திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர், உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார இதனால் அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில், தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் 19 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. வேட்பு மனு தாக்கல் செய்ய அடுத்த மாதம் 2 ஆம் தேதி கடைசி நாள் என்றும், வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 3 ஆம் தேதி என்றும் அறிவிக்கப்பட்டது.

இதேபோல் மனுக்களை வாபஸ் பெற நவ. 5 ஆம் தேதி என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. இதேபோல் புதுவை நெல்லித்தோப்பு தொகுதிக்கான வேட்புமனு தாக்கலும் இன்று தொடங்கியது.