election campaign

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஜெயலலிதா மறைவையடுத்து சென்னை ஆர்.கே,நகர் தொகுதியில் வரும் 12 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதிமுக சார்பில் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

திமுக சார்பில் மருது கணேஷ் என்பவர் வேட்பாளராக களத்தில் இறங்கியுள்ளார். ஏற்கனவே ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் வேட்பாளராக உள்ளார். ஓபிஎஸ் அணி சார்பில் இன்று அல்லது நாளை வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ளார்.

இந்நிலையில் ஆர்.கே.நகர் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள அதிமுகவின்ர் தினகரன் வெற்றி பெற்றால் அவர்தான் முதலமைச்சர் என கூறி வருகின்றனர்.

தினகரன் தேர்தல் களத்தில் சிறப்பாக பணியாற்றக்கூடியவர், தொண்டர்களை தாராளமாக கவனிக்கக்கூடியவர் என்ற பெயரைப்பெற்றவர்.

எனவே அதிமுக தொண்டர்கள் தொகுதி முழுவதும் உற்சாகமாக களமிறங்கியுள்ளனர்.அவர்களுக்கு பணப்பட்டுவாடா கனஜோராக நடைபெறுவதாகவும், வெற்றியின் விளிம்பில் தினகரன் இருப்பதாகவும் கூறப்டுவதால் அதிமுக தொண்டர்கள் சுறுசுறுப்பாக பணியாற்றத் தொடங்கியுள்ளனர்.

தான் வெற்றி பெற்றாலும் எடப்பாடி பழனிசாமிதான் முதலமைச்சராக தொடருவார் என தினகரன் அறிவித்திருந்தாலும் தொண்டர்கள் இப்படி கூறி வாக்கு சேகரித்து வருவதால் எடப்பாடி ஆதரவாளர்கள் வயிற்றில் புளியைக் கரைக்கத் தொடங்கியுள்ளது.