Asianet News TamilAsianet News Tamil

Thirumavalavan: ஈசன் தான் ஏசுவாக மாறி விட்டது... தமிழர்களின் மதம் கிறிஸ்தவம்தான்... திருமாவளவன் விளக்கம்..!

ஈசன் என்பதுதான் ஏசு என்று மாறி பின்பு ஜீசஸ் என மறுவி இருக்கிறது. கிறித்தவம் என்பது தமிழர்களின் இந்து மதம் தான்.

Eesan has become Jesus ... Thirumavalavan's explanation that surpassed the clergy ..!
Author
Tamil Nadu, First Published Dec 14, 2021, 12:47 PM IST

ஈசன் என்பதுதான் ஏசு என்று மாறி பின்பு ஜீசஸ் என மறுவி இருக்கிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் சிதம்பரம் தொகுதி எம்.பி.யுமான திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

சமீபகாலமாக இந்து எதிர்ப்பை கடுமையாக பதிவு செய்து வருகிறார் திருமாவளவன். ஏற்கெனவே அவர் திருவள்ளுவரை பற்றி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது அவர் இந்து மதம் குறித்து பேசிய ஒரு விடியோ வைரலாகி வருகிறது. அதில், ‘’ஈசன் என்பதுதான் ஏசு என்று மாறி பின்பு ஜீசஸ் என மறுவி இருக்கிறது. கிறித்தவம் என்பது தமிழர்களின் இந்து மதம் தான். (இந்து சகோதரர்களையும் நம் வழியில் கொண்டு வரவேண்டும் என்றால் முதலில் சைவம், வைணவ இலக்கியங்களை அவர்களிடம் நாம் சொல்ல வேண்டும். Eesan has become Jesus ... Thirumavalavan's explanation that surpassed the clergy ..!

தோமையர் காலத்தில் கட்டப்பட்ட தேவாலயங்கள் தான் சைவ அடையாளங்களாக தொடக்க காலத்தில் இருந்திருக்கின்றன. அந்த சமயத்தினரிடம் ஞான ஸ்தானம் பெற்றவர்தான் திருவள்ளுவர். தோமையர் வழி வந்த தமிழர் சமயத்தவர்களால் செய்யப்பட்டது. (தோமையர் கூறியதை கேட்டு அவர் அறிந்தவற்றை தெரிந்தவற்றை கேட்டு திருக்குறளாக எழுதினார் திருவள்ளுவர். திருக்குறளில் ஒவ்வொரு குறளிலும் கிறிஸ்தவ சிந்தனை  இருக்கும். 

திருக்குறள் எழுதிய திருவள்ளுவர் ஞானஸ்தானம் பெற்று, கிறிஸ்துவராக மாறி தான் திருக்குறளை எழுதினார் என்ற பேராசிரியர் தெய்வநாயகத்தின் கருத்து, ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். திருவள்ளுவர் ஞானஸ்தானம் பெற்றவர். அவர் ஒரு கிறிஸ்தவராக இருந்துதான் திருக்குறள் நூலை எழுதியுள்ளார்.

 Eesan has become Jesus ... Thirumavalavan's explanation that surpassed the clergy ..!

திருக்குறள் சமத்துவத்திற்கான நூல். திருவள்ளுவர் சமத்துவத்திற்கான போராளி; திருவள்ளுவரை இந்துத்துவத்தோடு ஒப்பிடுவது அவரையே கொச்சைப்படுத்துவதாகும். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற மகத்துவமான தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்ட நூல் திருக்குறள்; பிறப்பிலேயே சாதியை வைத்து மனிதர்களிடத்தில் ஏற்றத்தாழ்வை கற்பிப்பது இந்துத்துவம்; திருவள்ளுவரை இந்துத்துவ சக்திகள் ஒருபோதும் உரிமைகோர முடியாது’’ எனத் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios