Asianet News TamilAsianet News Tamil

ஈழத் தமிழர் நலன் : தடம் பதித்த ஸ்டாலின்..! சரியான திசையில் திராவிட மாடல்..!!

1983 1984 காலகட்டத்தில் ஈழத் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டிக்கும் வகையில் கருணாநிதி அவர்களும் பேராசிரியர் அன்பழகன் அவர்களும் தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர், 

Eelam Tamil Karunanidhi Stumbled,  Corrected  Stalin .. Dravidian model in the right direction .
Author
Chennai, First Published May 7, 2022, 10:52 AM IST

தமிழகத்தில் இப்போது உள்ள கட்சிகளைக் காட்டிலும் அதிகமாக  இலங்கைத் தமிழருக்காக தனி ஈழத்துக்காக பேசிய இயக்கம்  என்று ஒன்று உண்டென்றால் அது திராவிட முன்னேற்றக் கழகம் ஆகத்தான் இருக்கும். அந்த அளவிற்கு ஈழத்துக்கு ஆதரவாக இருந்ததால் இரண்டு முறை கலைக்கப்பட்டது திமுக ஆட்சிதான். தற்போது  தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின்  ஈழ மக்களுக்கும், அகதிகள் முகாமில் வசிக்கும் ஈழத் தமிழர்களுக்கும் ஆதரவாக எடுத்து வரும் நடவடிக்கைகள், திமுக மீதான பல விமர்சனங்களை  துடைத்தெறிந்து வருகிறது எனலாம். 

ஈழத்தமிழர்- திமுக தொடர்பும் வரலாறும்:- 

ஈழத்தமிழர் - திமுக இடையேயான வரலாறு, உறவு என்பது நீண்ட நெடியது. இப்போதுள்ள அரசியல் தலைவர்கள் ஈழத்தை பற்றி அறிவதற்கு முன்பாகவே ஈழ அரசியல் குறித்து பேசிய இயக்கம் திமுக. திமுகவுக்கும் ஈழத்திற்குமான உறவு சில கட்சிகளை போல 2009ஆம் ஆண்டிலிருந்து துவங்கியது அல்ல, திமுக ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்தே தொடங்கியது ஆகும். திமுக துவங்கப்பட்ட போது அறிஞர் அண்ணா அவர்கள் பொதுச்செயலாளராக தலைமை தாங்கி சிதம்பரத்தில் நடந்த பொதுக்குழுவில் ஈழத்தமிழர் பிரச்சனைக்கு தீர்வு கான முதல் தீர்மானத்தை நிறைவேற்றியவர் கலைஞர் கருணாநிதி தான். அதன்பின்னர் தூத்துக்குடியில் நடந்த பொதுக்குழுவில் ஈழத்தமிழர் பிரச்சனையை ஐநா மன்றம் கொண்டு செல்ல வேண்டும் என தீர்மானத்தை கொண்டு வந்தவரும் அதே கலைஞர் கருணாநிதிதான்.

1983 - 1984 காலகட்டத்தில் ஈழத் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டிக்கும் வகையில் கருணாநிதி அவர்களும், பேராசிரியர் அன்பழகன் அவர்களும் தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர், ஈழத் தமிழர்களுக்காக அவர் நடத்திய போராட்டங்களுக்கு அளவே இல்லை எனலாம். 1991ம் ஆண்டு கலைஞர் தலைமையிலான ஆட்சி விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக இயங்கிக் கொண்டிருக்கிறது என்றும், போராளிக் குழுவினரை தமிழகத்தில் நுழையவிட்டது  என்றும் ஜெயலலிதா அவர்கள் வெளிப்படையாக பேசும் அளவிற்கு ஈழத் தமிழர்களுக்காக கருணாநிதி அரசு பல பழிக்களை ஏற்றது என்பதை எவரும் மறுக்க முடியாது. 

Eelam Tamil Karunanidhi Stumbled,  Corrected  Stalin .. Dravidian model in the right direction .

டெசோ மாநாடு:-

2009 முள்ளிவாய்க்கால் இறுதிப் போருக்குப் பின்னரும் போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் குழந்தைகள் எஞ்சியிருக்கும் தமிழர்கள் நலனுக்காக சென்னையில் ஆகஸ்ட் 12ஆம் தேதி புலம்பெயர் தமிழ் அமைப்புகள் சேர்ந்தவர்களையும், ஈழ ஆர்வலர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் என அனைவரையும் திரட்டி காலையில் கருத்தரங்கம் மாலையில் டெசோ மாநாடு நடத்தி தீர்மானம் நிறைவேற்றிய இயக்கம் திமுகதான். ஈழம் என்ற சொல்லை கூட பயன்படுத்த தடை உத்தரவு போடப்பட்டிருந்த அந்நேரத்தில் நீதிமன்றம் சென்று அதை உடைத்து காட்டியது திமுக அரசுதான். டெசோ மாநாட்டில் மொத்தம் 14  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன அதில் முதல் தீர்மானம், ராஜபக்ச நடத்திய கொடூர இன அடிப்படையில் மனித உரிமைக் குழுவின் சார்பில் சர்வதேச நம்பகமான சுதந்திரமான விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டு இலங்கையில் நடைபெற்ற இன அழிப்பு போர்க் குற்றங்களும் கண்டறியப்பட்டு போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.  இந்திய அரசை இதனை செய்ய வேண்டும்.  ஈழப் பகுதிகளில் சிங்கள மக்களை குடியமர்த்தும் முயற்சியை இலங்கை அரசு செய்து வருகிறது. இலங்கை அரசின் இத்தகைய கொடும் செயல்களை உலக நாடுகளின் பிரதிநிதி யாக உள்ள ஐநா மன்றம் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்பதுதான். இலங்கை தமிழ் மக்கள் தாங்கள் விரும்பும் அரசியல் தீர்வை தாங்களே முடிவு செய்துகொள்ளும் வகையில் அவர்களுக்கு முழு உரிமை வழங்குவதற்கு இந்திய அரசு ஐநா மன்றத்தில் தீர்மானம் கொண்டு வர வேண்டும். தமிழர் பகுதியில் இருந்து சிங்கள ராணுவம் உடனே வெளியேற வேண்டும் என மொத்தம் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

ஈழத்திற்காக இரு முறை ஆட்சி இழந்த திமுக:-

ஈழத்தமிழர்களுக்காக இருமுறை ஆட்சியை இழந்தது திமுகதான். மத்திய அரசில் இருந்த போதும் அங்கம் வகித்த போதும் ஈழத்தமிழர்களுக்காக திமுக பல போராட்டங்களை நடத்தி காட்டியுள்ளது. ஆனாலும்கூட 2009இல் இனப்படுகொலையை காரணம்காட்டி திமுகவை குற்றவாளியாக்கி பாஜக- அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து திமுகவை விமர்சித்து வந்தன இன்றும் விமர்சித்து வருகின்றன. அது தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் திமுக வெற்றி பெற்று இன்று முதல் அமைச்சராக முக ஸ்டாலின் பதவியேற்றுள்ளார்.

இதேபோல் ஈழத்தமிழருக்காக அதிக அளவில் திமுகவினர் தீக்குளித்து உள்ளனர் என்பது வரலாறு,  இதுவரை ஈழத் தமிழருக்காக மொத்தம் தமிழ்நாட்டில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். ஈழத்தமிழருக்கு ஆதரவாக முதல் முதலாக 1989 ஆம் ஆண்டில் தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்டவர்கள் ஸ்ரீமுஷ்ணம் மு.ஆறுமுகம் என்கிற நல்ல உதயசூரியன் ஆவர். இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக தீக்குளித்து உயிர்நீத்தவர் ஆவார்.

Eelam Tamil Karunanidhi Stumbled,  Corrected  Stalin .. Dravidian model in the right direction .

“அகதிகள் அல்ல, அனாதைகள் அல்ல எங்கள் உறவுகள்” - ஸ்டாலின்.. 

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றவுடன் இனி ஈழத் தமிழர்கள் அகதிகள் என கூற அவர்கள் அனாதைகள் அல்ல சட்டப்பேரவையில் அறிவித்தார் அவரின் இந்த அறிவிப்பு இலங்கை தமிழர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியது. 1980, 1990  ஆகிய காலகட்டங்களில் தமிழகத்திற்கு வந்த தமிழர்களை அரவணைத்து அவர்கள் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. கல்வி உரிமை அளிக்கப்பட்டது, வேலைவாய்ப்புகளும் ஏற்படுத்தப்பட்டது. போர் முடிந்து நாடு திரும்பமன மில்லாமல் பலரும் தமிழகத்திலேயே தங்கி விட்டனர். தமிழ்நாட்டிலேயே பிறந்து தமிழகத்திலேயே வளர்ந்த இலங்கை தமிழர்கள் ஏராளமாக உள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள இலங்கை தமிழர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். இலங்கை தமிழர்களுக்கு 108 கோடி மதிப்பில் 3510 வீடுகள் கட்டித்தரப்படும், தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழர்களின் அகதிகள் முகாமில் வீடுகள் சாலைகள் சீரமைக்கப்படும், இலங்கைத் தமிழர்கள் முகாமிலுள்ள ஏழு 7469 பழுதடைந்த வீடுகளும் 231 கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டித்தரப்படும்.

குழந்தைகள் கல்விக்காக 5 கோடி ஒதுக்கப்படும். அவர்களுக்கு குடியுரிமை வழங்குவது அல்லது சொந்த நாட்டிற்கு செல்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்,அதற்காக தனிக் குழு அமைக்கப்படும், இலங்கை அகதிகள் குடும்பத்தினருக்கு விலையில்லா எரிவாயு அடுப்பு மற்றும் இணைப்பு வழங்கப்படும்.  இலங்கை தமிழர்கள் அனாதைகள் அல்ல நாம் இருக்கிறோம் அவர்களுக்குத் துணையாக என அவர் அறிவித்தார். அவரின் அறிவிப்பு சட்டமன்றத்தில் மிகுந்த வரவேற்பை பெற்றது ஸ்டாலின் இந்த வார்த்தை அவர்களுக்கு நம்பிக்கையும், அவர்கள் வயிற்றில் பால் வார்த்தது.

இலங்கைக்கு அள்ளிக் கொடுக்கும் ஸ்டாலின்:-

இதே நேரத்தில் இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அங்கிருந்து கடல் மார்க்கமாக ஏராளமான தமிழர்கள் தமிழகம் நோக்கி வருகின்றனர். பசி பஞ்சம் அங்கு தலைவிரித்தாடுகிறது, இந்நிலையில் மனிதநேய அடிப்படையில் தமிழக முதலமைச்சர் மு. க ஸ்டாலின் இலங்கையில் வாழும் மக்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை தமிழ்நாட்டில் உடனடியாக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளார். அது குறித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார்.  அத்தீர்மானத்தின் போது பேசிய ஸ்டாலின் 50 கோடி ரூபாய் மதிப்பில் 40 ஆயிரம் டன் அரிசி, ரூபாய் 22 கோடி மதிப்பிலான 137 மருந்து பொருட்கள்.  ரூபாய் 15 கோடி மதிப்பில் குழந்தைகளுக்கு வழங்க 500 டன் பால் பவுடர். இலங்கையில் வாழக்கூடிய அனைத்து மக்களுக்கும் வழங்க இருப்பதாக அறிவித்தார். இதற்கு அனுமதி வழங்க வேண்டுமென மத்திய அரசிடம் அவர் கோரினார். மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

உதவிப் பொருட்களை இலங்கைக்கு அனுப்ப தயார் படுத்தும் பணி நடந்து வருகிறது. தமிழகம் இந்த மனிதாபிமானமிக்க உதவிக்கு இலங்கையிலுள்ள பல்வேறு தரப்பு மக்களும் ஸ்டாலினை பாராட்டி வருகின்றனர். மதுரையில் தமிழக முதலமைச்சரின் இந்த உதவியை நன்றியோடு என்றும் நினைத்துப் பார்ப்போம் என்று இலங்கை நாடாளுமன்றத்தில் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் பாராட்டியுள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியும் ஸ்டாலினை மனமார பாராட்டியுள்ளது.

Eelam Tamil Karunanidhi Stumbled,  Corrected  Stalin .. Dravidian model in the right direction .

இலங்கைத் தமிழ் எம்.பி ஸ்டாலினுக்கு பாராட்டு :-  

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மனோ கணேசன் அவர்கள் முதலமைச்சர் ஸ்டாலின் உதவ முன்வந்திருப்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த எங்கள் தமிழ் தாத்தன் கணியன் பூங்குன்றனாரின் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கூற்று மெய்யாக சமகால அர்த்தத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். இலங்கை கடுமையான நெருக்கடியை சந்தித்து உள்ள இந்த நிலையில் இருண்ட குகைக்குள் ஒளிக்கீற்றாக முதலமைச்சர் ஸ்டாலின் இந்த அறிவிப்பு வந்துள்ளது. தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் என்ற முறையில் இதை வரவேற்கிறேன். ஆரம்பத்தில் தமிழருக்கு மட்டும் என்று அறிவித்திருந்தாலும் இப்போதே மொழி இனம் பேதம் கடைந்து அனைவருக்கும் உதவி செய்யப்படும் என அவர் அறிவித்துள்ளார். அவர் சட்டமன்றத்தில் ஆற்றிய உரை என் கண்களை கலங்க வைத்து விட்டது என அவர்  நெகிழ்ந்து பாராட்டியுள்ளார். இப்படியாக திராவிட மாடல் ஈழதமிழர் உறவை வலுப்படுத்தும் வகையில் முதல்வர் ஸ்டாலினின் நடவடிக்கைகள் அமைந்துள்ளது குறிப்பிடதக்கது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios