தற்போது கொரோனா பாதிப்பு நிலவரம் உச்சத்தில் இருப்பதால் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா என்று கேள்வி எழுந்தது. 

கொரோனோ பாதிப்பு காரணமாக வழக்கமாக மார்ச் மாதத்தில் நடைபெறும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு இந்த ஆண்டு மே மாதம் 3-ம் தேதி தொடங்கி 21-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா கட்டுக்கடங்னாத வேகத்தில் கொரோனா பரவியதால் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. மேலும் 12ம் வகுப்பு மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார்படுத்தும் விதமாக வாட்ஸ்ஆப் மூலம் அலகுத் தேர்வுகளை நடத்த உத்தரவிட்டுள்ள தமிழக அரசு, அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தற்போது கொரோனா பாதிப்பு நிலவரம் உச்சத்தில் இருப்பதால் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா என்று கேள்வி எழுந்தது. மேலும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்களை ஒதுக்கீடு செய்வது தொடர்பாகவும் பல்வேறு சந்தேகங்கள் எழுந்து வருகின்றன. இதுகுறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமைச் செயலகத்தில் அவ்வப்போது ஆலோசனை நடத்தி வருகிறார். 

+2 பொதுத்தேர்வை கட்டாயம் நடத்த வேண்டும் என்றும், அதற்கான கொரோனா வழிகாட்டு நடைமுறைகளை வகுக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள், கல்வியாளர்கள், மாணவர் அமைப்பினர் ஆகியோர் ஆலோசனை வழங்கியுள்ளனர். இன்று திருச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், பிளஸ் 2 பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளதாகவும், கொரோனா சூழலில் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு உரிய முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.