edappadi question stalin about gutka

குட்கா விவகாரம் குறித்து ஆதாரத்தை காட்டியும் சபாநாயகர் பேச அனுமதிக்காததால் திமுக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

சில நாட்களுக்கு முன்பு பான், குட்கா அதிபர்களிடம் அமைச்சர் விஜய பாஸ்கர் , ஐபிஎஸ் அதிகாரிகள் டி.கே.ராஜேந்திரன் மற்றும் ஜார்ஜ் உள்ளிடோர் லஞ்சம் வாங்கியதாக ஊடகங்களில் ஆதாரத்துடன் வெளியாகியது.

ஆனால் தமிழக அரசு இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதைதொடர்ந்து இதுகுறித்து நீதிமன்றங்களில் எதிர்கட்சிகள் வழக்கு தொடர்ந்துள்ளன.

இந்நிலையில் இன்று நடைபெற்ற சட்டப்பேரவையில் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் சென்னையில் எங்கெல்லாம் குட்கா விற்கப்படுகிறது என ஆய்வு செய்து புகைப்படங்களுடன் வெளிப்படுத்தினார்.

மேலும் பெண்கள் முதல் குழந்தைகள் வரை குட்கா விற்க உபயோகப்படுத்தப்படுகிறார்கள் என தெரிவித்தார்.

இதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தடை செய்யப்பட்ட குட்காவை எதிர்கட்சி தலைவர் சட்டப்பேரவைக்கே எடுத்து வந்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இது அவர்களுக்கு எங்கே கிடைத்தது என கேள்வி எழுப்பினார்.

இதுகுறித்து பேசிய சபாநாயகர் தனபால் எதிர்கட்சிகளின் செயலை உயர்மட்ட விசாரணைக்கு அனுப்புவோம் என தெரிவித்தார். இதனால் திமுக சட்டப்பேரவையில் வெளிநடப்பு செய்தனர்.