83 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணையில் தூர் வாரும் பணியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.

திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தமிழகத்தின் பெரும்பாலான ஏரிகள் குளங்கள் ஆகியவற்றை பார்வையிட்டு தூர் வாரும் பணியை மேற்கொண்டு வருகிறார்.

இதைதொடர்ந்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தூர் வார ஆரம்பித்துள்ளார்.

1934 ஆம் ஆண்டு மேட்டூர் அணை கட்டப்பட்டது. கடந்த 83 ஆண்டுகளில் இது வரை மேட்டூர் அணை தூர் வாரப்படவில்லை. வெள்ளப்பெருக்கு மற்றும் மழை காரணமாக சுமார் 20 சதவீத அளவுக்கு சகதி படிந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 83 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக மேட்டூர் அணையில் தூர் வாரும் பணியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தூர் வாரி தொடங்கி வைத்தார்.

முதற்கட்டமாக ஒரு லட்சம் கிலோ மீட்டர் வண்டல் மண் இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒரு ஏக்கர் நன்செய் நிலத்துக்கு 25 டிராக்டர் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஒரு ஏக்கர் புன்செய் நிலத்திற்கு 35 டிராக்டர் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதில் அமைச்சர்கள் சரோஜா, தங்கமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.